Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொங்கணர் மகத்துவம் காகபுசுண்டர்- பாடல்கள்
முதல் பக்கம் » பட்டினத்தார் திருப் பாடல் திரட்டு
ஞானவான்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2015
03:12

75. காணப்பா வின்னமய மாகி நின்று
கலந்துநின்ற புராணமய கோச மாச்சே
ஊனப்பா விக்யான மயமு மாகி
உத்தமனே மனோபயமாங் கோச மாச்சு
பூணப்பா ஆனந்த மயமு மாகப்
பொங்கிற்றே யஞ்சுதிறை போதத் துக்குத்
தோணப்பா திறையஞ்சு மாயை மாயை
சொல்லுகிறேன் சூட்சத்தைப் பூட்டிப் பாரே.

76. பூட்டியதோர் விசிட்டனென்றும் விராட னென்றும்
புகழ்பெரிய ஏமகற்பப் போக்கே தென்றும்
நீட்டியதோ ரண்டமென்றும் புவன மென்றும்
நேரான பதங்களென்றும் மாயை யாச்சே
ஆட்டியதோ ராட்ட மெல்லாம் மாயை யாட்டே
அறிந்துகொள்ளு முன்மனமே மட்டை மாயை
மூட்டியதோர் மனமும்வந்த வரைக்கே நிற்கும்
மூதண்ட மனங்கடக்க முடியா வாறே.

77. வாறான வுலகத்திற் சுத்த வீரன்
மனத்தோடே போராடி யருவில் மாள்வான்
கூறான ஞானியென்றால் லிங்கம் புக்குக்
குறியான அம்பலத்தில் சேர்வா னப்பா
தாறான வுலகத்தோர்க் கடுத்த ஞானஞ்
சகத்திரமாங் கோடியிலே யொருவர் சொல்வார்
வீறான சிலபேய்கள் சாங்கம் பேசி
விழிந்திறந்து விழிந்திறந்து திரிவர் தானே.

78. தானென்ற பிரமருமோ ரறிவிற் சென்றார்
சாதகமாய் மாவென்றால் அறிவிற் றோன்றும்
கோனென்ற ருத்திரனோ ரரூவிலந்தங்
கொள்கின்ற மகேச்சுரனோ ரறிவிற் றோன்றும்
வானென்ற சதாசிவனோ மணியைக் காண்பான்
மகத்தான ஐவருந்தா னாக்கிப் பீடம்
வேனென்ற பஞ்சகர்த்தாள் மட்டுஞ் சென்றால்
வேதாந்தி யெனமட்டுஞ் சொல்வார் பாரே.

79. பாரப்பா சித்தரென்றார் குளிகை போட்டுப்
பகுத்தறிவா ருள்மனையைப் பரிந்து போற்றி
நேரப்பா தம்மொடுபூ ரணத்தி னின்று
நேராக வோடம்போல் நீஞ்சி யாடிச்
சேரப்பா திரும்பிவந்து புகுது வார்கள்
செகத்திலுள்ள சித்தருக்கே அடுத்த வாறு
கூறப்பா பூரணத்தில் நாதந் தாண்டிக்
கொங்கணர்தாம் சிலம்பொலியைக் கூடினாரே.

80. கூடினார் மூலகுரு பேர னென்று
கோடானு கோடிசித்த ராடிப் பார்த்தார்
ஆடினா ராடினா ரேற மாட்டார்
ஆச்சரியங் கொங்கணர்தா மகண்டில் சித்தர்
ஓடினா ரோடினா ரனேகங் கோடி
ஓங்கிநின்ற காகத்தி லொன்றிப் போட்டுத்
தேடினார் தேடினார் குளிகை தன்னைச்
சித்தருக்குச் சொருபனிது கிட்டும் வாறே.

81. வாறான சுருபமணி யாரின் வர்க்கம்
மகத்தான தெட்சணா மூர்த்திவர்க்கம்
கூறான தொன்றாய்நிட் களங்க மாகிக்
குவிந்துநின்ற பொருளாகிக் கூறொ ணாத
தாரான தற்பதமாய் அதுவு மற்றுச்
சச்சிதா னந்தத்தில் நின்ற ஆசான்
பேரான பிள்ளைகட்கு மணியு மீந்து
பெரும்பாதை மகாரமென்று பேசி னாரே.

82. பேசியதுர்க் கந்தமென்ன வென்று கேட்டால்
பெருவிரலே நீயாய்மெய் விரலே போத
மாசியது வற்றக்காற் கவிக்கு முன்னே
மக்களே யிந்தப்பா ரென்று காட்டித்
தேசியது மகாரவித்தை சென்று கூட்டிச்
செப்பாதே மகாரவித்தை குளிர்ந்த ஞானம்
வாசியதுக் கருகாகுங் கண்டு கொள்ளும்
மக்களே சின்முகத்தில் நடுப்பா லாமே.

83. நடுவென்ன வெட்டவெளி யொன்று மில்லை
நானுமில்லை நீயுமில்லை யகண்ட வீதி
கடுவென்ன லகுவென்ன மனஞ் செவ் வானால்
கண்டுகொள்ளு மென்றுசொல்லிக் கரத்திற் காட்டிச்
சுடுவென்ன தாபமென்ற முளையை முந்திச்
சுடுகின்ற துத்தியென்ன மௌனத் தீதான்
விடுவென்ன இந்திரியப் பாம்மை நீயும்
விட்டகன்றே யறிவோடோ மேவு மேவே.

84. மேடுமென்கை லாயபரம் பரையா மாணா
வெகுகோடி ரிடிகளுக்கு முபதே சித்தார்
மேவுமென்று சித்தரிலே யனேகங் கோடி
மேருவிலே யிருந்தார்க்கு முபதே சித்தார்
மேவுமென்றேன் னோடுபதி னாறு பேர்க்கு
விளங்கியவர் பதம்பிடிக்க வுபதே சித்தார்
மேவுமென்றே யெழுவருடன் திருமூ லர்க்கு
விளம்பினார் மெய்ஞ்ஞானம் விளம்பி னாரே.

85. விளம்பியநா மெல்லாங்கை லாய வர்க்கம்
மேருவிலே யெடுத்தவுட லெமக்கு மக்காள்
அளம்பினதோர் சனகாதி யையர் விட்டே
அரைக்கணமும் பிரியார்க ளடியை விட்டுத்
தளம்பினதோர் கொடிக்குக்கொழு கொம்பு போலே
சதாநித்தங் காத்திருந்தோ மையா கிட்டக்
கிளம்பினதோர் பந்துபோ லனேகம் பிள்ளை
கெடியிட்டு மாட்டியங்கே கிட்டினாரே.

86. கிட்டினங்கை லாயபரம் பரையி னாலே
கேளுமாச் சரியங்கொங் கணர்தாம் சென்று
கிட்டினோ மென்று சொல்லி யீசா னத்தே
கெடியான ரசமுண்டு சட்டை போக்கிக்
கிட்டினோ மிசானந் துதித்தோ மென்று
கெடியாகத் தவசிருந்து முத்த ராகிக்
கிட்டினோ மென்று சொல்லித் தட்சிணா மூர்த்தி
கெடியான பதம்பிடித்துப் பணித்திட்டாரே.

87. பணிந்திட்ட கொங்கணரைப் பார்த்து நாதன்
பாருலகிற் பிறந்தவனிப் படிதா னானால்
மணிந்திட்ட சடம்போக்கிக் கைலாயத் தேக
மானதுதான் வெகுகடின மதிக மெத்தக்
கனிந்திட்ட கனிவாலே வீரத் தாலே
கலங்காமற் சமாதியுற்றுக் கயிலா யத்திற்
றணிந்திட்ட புத்திகொண்டிங்கே வந்தாய்
சாதகமா யொருவரையுங் கண்டி லேனே.

88. கண்டிலே னாச்சரியங் குமார னேபார்
கலந்தநற் சென்மமிவர் கைலாய மானார்
ஒண்டிலே நாலதுக்கு மகத்வ மென்ன
உற்றசிவ விந்துவிலப் படிதா னாச்சு:
கண்டிலே னிவரைப்போற் சித்தர் காணேன்
காரணமா யிவனுக்குத் தீட்சிப் பேனான்
பண்டிலேன் கொங்கணரே மயங்க வேண்டா
பரம்பரமாய் வயதுதந்த மௌனந் தானே.

89. மௌனவித்தை மூலருக்கு முன்னே சொன்னேன்
மருவியவர் காலாங்கிக் கதுவே சொன்னார்....
மகத்தான போகருந்தா னுமக்குச் சொன்னார்
மௌனவித்தை யகண்டாதி யறிந்துகொள்ளும்
மற்றொன்று மயக்கமற்று மௌனத் தார்க்கு
மௌனவித்தை யெய்திக்கா லவனே ஞானி
வாய்திறந்து பேசாதே மகாரம் நன்றே.

90. நன்றான மௌனத்திற் கடிகை சேர
நல்வினையுந் தீவினையும் நாச மாகும்
நன்றான மௌனமென்று நினைக்க முத்தி
நல்லோர்கள் நினைப்பார்கள் மற்றோர் காணார்
நன்றான மௌனமல்லோ ரிடிகள் சித்தர்
நாலுதிக்குஞ் சொருபமல்லோ ஞானி யானார்
நன்றான மௌனத்தைக் கண்டார் முன்னே
நலமாகக் கூப்பிடுவது கண்டி லாரே.

91. கண்டிலார் மோனத்தி லனேக சித்தி
காணுமப்பா சொல்லுகிறேன் நன்றாய்க் கேளே
அண்டிலார் மந்திரங்கள் செபிக்கும் போது
அப்பனே மௌனமென்ற தீட்சை கேளு;
ஒண்டியாய் வாய்மூடிப் பேச்சு மற்றே
ஒருசேரச்  சமைத்துண்ணு ஒருபோ தப்பா
விண்டிலா தெந்நேரஞ் செபித்தா யானால்
விளங்கியதோ ரேழுலட்ச மந்த்ரஞ் சித்தே.

92. சித்தாகுஞ் சித்தியுமா மெட்டெட் டாகுந்
திறமாக நின்றவர்க்கு மந்த்ரஞ் சித்தி
சத்தாகும் வேத மந் திரத்தைப் பாவி
சலசலெனப் பேசிச்சே விப்பார் கோடி
கத்தாதும் நாய்போல கத்தி யென்ன
காசுக்கு மாகாது சித்தி யில்லை
முத்தான மௌனம்விட்டால் மனம்பா ழாச்சு
மோசமிந்த வேதமெல்லாம் பொய்யென் பாரே.

93. பொய்யென்றே யெண்ணியெண்ணி யுலகங் கெட்டுப்
போச்சதனா லேயகத்தின் பேத மாச்சு:
கையென்று யோகத்தில் மௌன முட்டக்
கடுஞ்சித்தி யறிவுமட்டுங் கலந்து தாக்கு
சையென்ற நிர்த்தமப்பா ஆறிற் காணுஞ்
சாதகமாய் மேல்மூலந் தாண்டிக் காணும்
மெய்யென்று பிடித்தக்கா லவனே யோகி
விரைந்தனை யறியாட்டால் விருதா மாடே.

94. விருதன்றோ வுலகத்தில் ஆசா னென்று
வேடமிட்டு வேடமிஞ்சி மோடி யேற்றி
விருதன்றோ பணம்பறித்துப் பிழைப்பா யையோ
வேதாந்த மொன்றுமில்லை சாங்க மென்பார்
விருதன்றோ கெடுத்துவிட்டா ருலகத் தோரை
வேடமென்று மயக்காலே மயங்கிப் போனார்
விருதன்றோ சீடருடைப் பாவ மெல்லாம்
விளையாட்டுப் போல்வாங்கி விழுந்திட் டாரே.

95. விழுந்திட்டா ரென்றறிந்து கொங்காண ரேநீர்
வெகுபிள்ளை பெற்றீர்முந் நூறு பிள்ளை
நழுந்திட்ட பிள்ளையுண்டோ திறந்தா னுண்டோ
நலமாக வுமைப்போலா னாரு முண்டோ
அழுந்திட்ட சமாதியுண்டோ தியான முண்டோ
ஆகாத பிள்ளையுண்டா சொல்லுஞ் சொல்லும்
கொழுந்திட்ட தேவரீர் கருணை யாலே
கொஞ்சமறப் பிள்ளையிலே கூடி லேனே.

96. கூடாத நல்லபுத்தி சித்தர் வென்றார்
கொள்கியே வரங்கள் பூமியிலே தட்டி
நீடாகத் தெண்டனிட்டே அழைத்துக் கொண்டு
நிமிடத்திற் குகையினுள்ளே நேர்ந்து போனார்
ஆடானா லதுமாட்டு வன்றே சித்தர்
ஆனந்த போகமுண்ட ஆண்மை யாண்மை
ஓடானா லோட்டுநிர்க் குணத்தின் வீதி
ஒருமனமாய் நின்றுபுத்தி யுரைப்புத் தானே.

97. தானென்ற கொங்கணர் போல் பிள்ளை பெற்றால்
தங்குமடா குட்டென்கை லாய மூர்த்தி
வானென்ற சுந்தரா னந்தன் விந்து
வரவற்ற பூரணமே தாப மென்னக்
கானென்ற வெளி கடக்க அறிவோம் நாங்கள்
கரையற்ற போகத்தைப் பானஞ் செய்வோம்.
கோனென்ற கைலாய பூரணமே தேவர்
கொள்கியதோ ருற்பனமும் லயமுஞ் சொல்லே.

98.சொல்லுகிறேன் கேளுங்கள் மக்காள் நீங்கள்
சுகமாக வாரிதியல் மேக நீர் போல்
அல்லுகிற துவலையைப்போற் பிறப்புண் டாச்சே.
அதுவோங்கும் விவாமென்ன சொல்வீ ரையா
பல்லுகிற சந்திரனாம் நீரை வாங்கு
பாங்கான ரவியங்கே நன்றாய்ப் பாரு
சொல்லுகிற கெற்பத்தில் விந்து வுன்னிச்
சிந்தூளி பரஞ்சத்தாற் சின்ன மாச்சே.

99. ஆச்சப்பா சனனமிந்தப் படியே யாகில்
அடங்கிறதக் கினியும்ரவி மதியுங் கூடி
வாச்சப்பா சந்திரனிற் கலந்து போனால்
மாளூகிற விதமிதுதான் குளிர்ந்து போகும்
நீச்சப்பா சின்னமொடு பாணம் ரண்டும்
நேராக மனோன்மணியைத் தொட்டு மீறாம்
ஓச்சப்பா லக்கமில்லை யெழுவகைத் தோற்றம்
உத்தமனே நாலுவகை யோனி காணே.

100. காணிந்தப் படியெல்லாங் கண்டு கொண்டு
கலங்காம லிருக்காமல் யுகமே கோடி
வானிந்த சாயமட்டே சால மெல்லாம்
மனந்தாண்டி அறிவில்வந்த தெல்லாம் போச்சே
ஆனிந்தப் படிநீங்கள் சாமாதி கொண்டே
அரைவிட்டால் குளிகையிட் டோடிப் பாரு
தோணிந்தப் படிசொன்னேன் முன்னைத் தூக்குச்
சுழல்காற்றுத் துரும்பதுபோல் மவுன மாமே.

101. மௌனமென்றீ றெனையாண்ட தட்சிணா மூர்த்தி
மலர்பணிந்தே ஞானமது நூறுஞ் சொன்னேன்
மௌனமென்ற நாதாக்கள் பதத்தைப் போற்றி
வகையோடே நிகண்டாக வாதஞ் சொன்னேன்
மௌனமென்றீர் ஞானம்பொய் யென்று சொல்லி
வாகான செயமண்டி போட்டே நூற்றில்
மௌனமென்ற சமரசத்தான் மக்காள் மக்காள்
வாகான ஞானமுறை முற்றுங் காணே.

 
மேலும் பட்டினத்தார் திருப் பாடல் திரட்டு »
temple news
நினைமின் மனனே! நினைமின் மனனேசிவபெரு மானைச் செம்பொனம் பலவனைநினைமின் மனனே! நினைமின் மனனே!அலகைத் தேரின் ... மேலும்
 
5. திருமால் பயந்த திசைமுகன் அமைத்துவரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்துமலைமகள் கோமான் மலர் அடி ... மேலும்
 

திரு ஏகம்ப மாலை நவம்பர் 06,2015

(திருக்கச்சி ஏகாம்பரநாதரைத் துதித்துப் பாடிய மாலை)1. அறந்தான் இயற்றும் அவனிலுங் கோடி அதிகம் ... மேலும்
 

திருத் தில்லை நவம்பர் 06,2015

1. காம்பிணங் கும்பணைத் தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்தாம்பிணங் கும்பல ஆசையும் விட்டுத் ... மேலும்
 
temple news
1. ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar