பதிவு செய்த நாள்
07
ஏப்
2016
03:04
விசுவாமித்திர முனிவரால் ராமபிரானுக்குக் கொடுக்கப்பட்ட அஸ்திரங்கள் என்னென்ன தெரியுமா? தண்டசக்கரம், தர்மசக்கரம், காலசக்கரம், விஷ்ணுசக்கரம், ஐந்திராஸ்திரம், வஜ்ராஸ்திரம், மகாசூலம், பிரம்மசிரஸ், ஜஷீகாஸ்திரம், பிரம்மாஸ்திரம், மோதகி, சிகரி, தர்மபாசம், காலபாசம், வருணபாசம், வருணாஸ்திரம், சுஷ்காசநி, ஆர்த்திராசநி, பைநாகாஸ்திரம், நாராயணாஸ்திரம், ஆக்னேயாஸ்திரம், சிகரம், வாயவியாஸ்திரம், ஹயசிரஸ், கிரௌஞ்சம், விஷ்ணுசக்தி, ருத்ரசக்தி, கங்காளம், கோரமுஸலம், காபாலம், கங்கணம், நந்தனம், காந்தர்வம், மானவம், பிரஸ்வாபனம், பிரசமனம், சவுரம் தர்ப்பணம், சோஷணம், சந்தர்ப்பணம், வியாபனம், மதனம், கந்தர்ப்பதயிதம், பைசாசம், மோஹனாஸ்திரம், தமஸம், சவுமனம், சர்வர்த்தம், மவுஸலம், ஸத்யாஸ்திரம், மாயாதராஸ்திரம், தேஜஸ்பிரபம், சீசிரம், சுதாமனம், சிதேஷு என்ற இந்த அஸ்திரங்கள் எல்லாம் பிருகாச்வ புத்திரர்களாகும். இவையெல்லாம் ராமபிரானுக்கு விசுவாமித்திரரால் கொடுக்கப்பட்டவை என்று வால்மீகி முனிவர் தமது ராமாயணத்தில், பாலகாண்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.