திருநாவுக்கரசர் பாடிய இந்தப்பாடல் காளஹஸ்தி காளஹஸ்தீஸ்வரர், ஞானப்பூங்கோதை மீது பாடப்பட்டது. ஜாதகத்தில் நாகதோஷம் எனப்படும் ராகு, கேது தோஷம் நீங்கி திருமணயோகம் கைகூட இதைப் பாடலாம். இங்குள்ள அம்பிகை கல்வி தேவதையாக விளங்குவதால் மாணவர்களும் கல்வி விருத்திக்காக படிக்கலாம். அம்பாளின் பெயர் ஒன்பதாம் பாடலில் உள்ளது.
விற்றுõண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான் காண் வியன் கச்சிக் கம்பன்காண் பிச்சை அல்லால் மற்றுõண் ஒன்று இல்லாத மாசதுரன் காண் மயானத்து மைந்தன் காண் மாசொன்று இல்லாப் பொற்றுõண் காண் மாமணிநற் குன்றொப்பான்காண் பொய்யாது பொழில் ஏழும் தாங்கி நின்ற கற்றுõண் காண் காளத்தி காணப் பட்ட கணநாதன் காண் அவனென் கண்ணுளானே.