பல்வேறு பிரச்னைகளால் உயிரே போகுமளவு அபாய நிலையிலும் பாதுகாப்பு தருபவர் அவிநாசி லிங்கேஸ்வரர். கோயம்புத்துõர் மாவட்டத்திலுள்ள இந்தத்தலம் தென்னக காசி என புகழப்படுகிறது.
அவிநாசியிலிருந்து காசிக்கு சென்ற சிவபக்தர்கள் சிலர் அங்கிருந்து ஒரு லிங்கம், பைரவர், தீர்த்தம் ஆகியவற்றை கொண்டு வந்தனர். லிங்கத்தை பிரதிஷ்டை செய்து அவிநாசியப்பர் என பெயர் சூட்டினர். ‘விநாசம்’ என்றால் அழியக்கூடியது என்று பொருள். இத்துடன் ‘அ’ சேர்த்தால் ‘அவிநாசம்’... அதாவது அழியாத்தன்மை கொண்டது என பொருளாகிறது. இதுவே அவிநாசி ஆனது. இங்குள்ள இறைவனை வழிபட்டால் மீண்டும் பிறவாத்தன்மையும், அழியாப்புகழும் கிடைக்கும்.
இது ஒரு அமாவாசை தலம். அன்று காலையில் திறக்கும் கோவில் நடை இரவில் தான் அடைக்கப்படும். இந்நாளில் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி முன்னோர்களுக்காக அவிநாசியப்பரை வழிபட்டால், அவர்கள் செய்த பாவங்கள் தீர்ந்து முக்தி பெறுவார்கள்.
இருப்பிடம்: திருப்பூர் – கோவை ரோட்டில் 13கி.மீ. நேரம்: காலை 5.00 – 1.00 மணி, மாலை 4.00 – 9.00 மணி. அலை/தொலைபேசி: 94435 01129 04296 – 273 113