கோவில் விழாக்களில் கரகாட்டம் ஆடும் பழக்கம் எப்படி வந்தது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29செப் 2011 03:09
கிராமப்புற கோவில் விழாக்களில் கரகாட்டம் முக்கிய இடம் பிடிக்கிறது. ஆடி மாதத்தில் பெரும்பாலான அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும் என்பதால், அங்கே இந்த கரகாட்டத்தையும் நாம் கண்டுரசிக்கலாம். இந்த கரகாட்டத்திற்கும் மாரியம்மனுக்கும் நிறையவே தொடர்பு உள்ளது. விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டு வாழ்ந்து வந்த தமிழர்கள், தங்களது விவசாயம் செழிக்க பருவம் தவறாமல் மழை பெய்ய வேண்டும் என்று விரும்பினார்கள். அதையொட்டி மழை தெய்வமாகிய மாரி(மழை) அம்மனையும் ஆற்றுக் கடவுள்களான கங்கை மற்றும் காவேரி அம்மனையும் மழை வேண்டி வழிபட்டனர். இந்த தெய்வங்களை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக தண்ணீர் நிரம்பிய குடத்தை தலையில் ஏந்தி ஆடிப்பாடவும் செய்தனர். இந்த வழிபாடு தான் பின்னாளில் கரகாட்டமாக உருவெடுத்தது என்கிறார்கள்.