Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலை உருவ பிரம்மா! சங்காபிஷேகம் செய்வது ஏன்? சங்காபிஷேகம் செய்வது ஏன்?
முதல் பக்கம் » துளிகள்
கைவண்ண மங்கு கண்டேன் கால்வண்ண மிங்கு கண்டேன் .. இந்த சொல் உணர்த்துவது என்ன?
எழுத்தின் அளவு:
கைவண்ண மங்கு கண்டேன் கால்வண்ண மிங்கு கண்டேன் .. இந்த சொல் உணர்த்துவது என்ன?

பதிவு செய்த நாள்

21 நவ
2016
05:11

விசுவாமித்திர முனிவருடன் இராமனும் லட்சுமணனும் மிதிலையை நோக்கி கானகத்தினூடே செல்லும் வழியில், பூஞ்சோலை நடுவிலிருந்த ஒரு ஆசிரமத்தைக் கண்டனர். யாரும் இல்லாமலிருந்த அந்த ஆசிரமத்தைப் பற்றி இராமன் விசுவாமித்திரரிடம் வினவ, அதன் வரலாற்றை விவரித்தார் முனிவர். மாமுனிவரான கவுதமர் தன் மனைவி அகலிகையுடன் வாழ்ந்த ஆசிரமம் அது. வட மொழியில் அஹல்யா (மிகுந்த அழகுடையவள்) என்பர். அழகின் மறுவடிவமாக இருந்த அகலிகைமீது தேவர் தலைவனான இந்திரனுக்கு திடீரென ஆசையும் காதல் ஏற்பட்டது. ஒருநாள் அதிகாலை நேரத்தில் கவுதமர் நீராட நந்திக் கரைக்குச் சென்ற சமயம், இந்திரன் கவுதமர் வடிவில் ஆசிரமத்திற்குச் சென்று அகலிகையை தந்திரத்துடன் இன்புற்றான். அதை கம்பன் தனது இராமயாணத்தில்.

புக்கு, அவளோடு காமப்புது மணமதுவின் தேறல்
ஒக்க உண்டு இருந்தலோடும் உணர்ந்தாள்:
உணர்ந்த பின்னும் தக்கது அன்று என்ன ஓராள்:
தாழ்ந்தனன் இருப்ப, தாழா
முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும்
முடுகி வந்தான்.

என்று கூறுகிறார்.

அதாவது ஆசிரமத்தினுள் அகலிகை இந்திரனுடன் மகிழ்ச்சியாக இருக்கும் வேளையில் இது தனது கணவருடைய உடல்மணம் போலின்றி வேறு மாதிரியாக உள்ளதே என அகலிகை உணர்ந்தாள். உணர்ந்தபிறகும் தவறென்று விலகாமல் குழப்பத்துடன் இருந்த அந்த நொடியில் வெளியே சென்ற கவுதம முனிவர் வந்து விட்டார். நடந்த சம்பவத்தை அறிந்த முனிவர் கடும் கோபம்கொண்டு, இந்திரனை இனி ஆண்மையின்றிப் போகும்படி சபித்தார். அகலிகையை காற்றைப்புசித்து குப்பைகளுக்கு நடுவே கல்லாகக் கிடக்கும்படி சபித்தார். வால்மீகி உள்ளிட்ட சில இராமாயணங்கள் தன்னை அடைய வந்தது இந்திரன் என தெரிந்த பின்னும் அகலிகை உடன்பட்டாள் என தெரிவிக்கின்றன. ஆனால் கம்பன் மட்டும் சற்று மாறுபட்டு அகலிகை அறியாமல் தவறு செய்தாள் எனக் கூறுகிறார். அகலிகை கல்லுரு பெற்றதை. சங்க கால பரிபாடல் ஒன்றுக்கு பரிமேலழகர் உரை எழுதும்போது கல்லுருவெய்தியவாறு இதுவென்று கொண்டாள் பிழைத்த தண்டம் கூறுவாருமாய் என்கிறார். அதேபோன்று இந்திரன் பெற்ற சாபத்தையும் அதன் சாபவிமோசனத்தையும் பற்றி திருஞான சம்பந்தர் தமது முதல் திருமுறை தேவாரப்பாடலில்.

முன்னொரு காலத்து இந்திரன் உற்ற முனி சாபம்
பின்னொரு நாள் அவ்விண்ணவர் ஏத்தப் பெயர்வெய்திற்
தன்னருளால் கண் ஆயிரம் ஈந்தோன் சார்பு என்பர்
கன்னியர் நாளும் துன்னமர் கண்ணார் கோவில்.

எனப் பாடியுள்ளார். கவுதமருடைய சாபத்தால் இந்திரனின் தாடி வெளுத்தது என மகாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் ஒரு குறிப்பு வருகிறது. காம மயக்கத்தால் முன்பின் யோசிக்காமல் தவறு செய்து சாபம் காரணமாக பிறப்பு உறுப்பின்றி தேவலோகம் சென்ற இந்திரனுக்கு தேவர்களின் ஏற்பட்டால் ஆட்டின் பிறப்புறுப்பு பொருத்தப்பட்டது என புராணக் கதைகள் கூறுகின்றன. இதனால் இந்திரனுக்கு மேஷ விருஷணன் என்ற பெயரும் உண்டு. (ஒருவருடைய உடலுறுப்பை எடுத்து மற்றொருவருக்குப் பொருந்தும் இன்றைய நவீன மருத்துவத்திற்கு இராமாயண காவியம் ஓர் முன்னோடியாக இருந்துள்ளது).

தான் அறியாமல் செய்த தவறை மன்னித்து சாப விமோசனம் தருமாறு அகலிகை கௌதம முனிவரிடம் வேண்டினாள். இராமபிரானின் கருணையில் அவரது பாதம் பட்டவுடன் கல்லுருவம் மாறி பெண்ணாவாய் என கவுதமர் கூறினார். விசுவாமித்திரர் மூலம் கவுதமர், அகலிகையின் பழைய சம்பவத்தை அறிந்த இராமபிரான், ஆசிரமத்திற்கு அருகேயிருந்த ஓர் பாறைமீது உட்கார கால் வைத்தபோது அந்த கல்லானது பெண்ணுருவம் பெற்றது. இராமபிரானின் கருணையால் மறுவாழ்வு பெற்ற அகலிகை அவர்களை பலவாறு துதித்து வணங்கினாள். அகலிகை சாபவிமோசனம் பெற்றதையறிந்து வானிலிருந்து தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். தன்னுடைய தவத்தின் மகிமையால் அகலிகை சரீர சுத்தம் பெற்றதால், விசுவாமித்திரர், இராமபிரான் ஆகியோர் அகலிகையை கவுதம முனிவரிடம் அழைத்துச் சென்றனர். நெஞ்சினால் பிழைப்பிலாதவள் (உள்ளத்தால் பிழை செய்யாதவள்) என சமாதானம் கூறி, மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சொல்ல அவரும் ஏற்றுக்கொண்டார். பின்னர் கவுதமரும் அகலிகையும் அவர்களை உபசரித்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சி மூலம் இராமபிரானின் திருவடி மகிமையைக் கண்ட விசுவாமித்திரர் இராமனை எவ்வாறு புகழ்ந்தார் என்பதை கம்பர் மிக அழகாகப் பாடுகிறார்.

இவ்வண்ண நிகழ்ந்த வண்ண மினியிந்த
வுலகுக் கெல்லாம்
உய்வண்ண மன்றி மற்றோர் துயர்வண்ண
முறுவ துண்டோ
மைவண்ணத் தரக்கி போரில் மழை வண்ணத்
தண்ணலே நின்
கைவண்ண மங்கு கண்டேன் கால்வண்ண
மிங்கு கண்டேன்!

இந்த இராமாயாண சம்பவத்தின்மூலம் நாம் அறிவது இரண்டு கருத்துகள். ஒன்று, எல்லாம் வல்ல பரம்பொருளான இராமபிரானின் திருவடியை நம்பி பற்றிக்கொண்டால் அதன்மூலம் நமக்கு நற்கதி நிச்சயம். இரண்டாவது, மாற்றான் மனைவி அல்லது மாற்றாள் கணவனை அடைய நினைத்தால், அது தேவர் தலைவனான இந்திரனாக இருந்தாலும் கடைசியில் அழிவு நிச்சயம் என்பதை உணர்ந்து கற்பு நெறியுடன் வாழவேண்டும்.

 
மேலும் துளிகள் »
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
இது பசந்த் பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி என்றும் வழங்கப்படுகிறது. ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை ... மேலும்
 
temple news
போதாயன சூத்ரம்’ என்ற நுாலில் அமாவாசை பற்றி எழுதியவர் போதாயனர் என்ற ரிஷி. இவருக்கும், இவரது சீடரான ... மேலும்
 
temple news
இன்று மாதசிவராத்திரி, பிரதோஷம். இன்று சிவனை வழிபட மிக சிறந்த நாள். சிவராத்திரியில் ஈசனை வழிபட நற்கதி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar