மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) பெண்களால் நன்மை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2016 02:12
உதவும் மனப்பான்மை கொண்ட மகரராசி அன்பர்களே!
குரு 9ம் இடமான கன்னி ராசியில் இருப்பதால் வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். ராசிக்கு 11ல் உள்ள சனி நற்பலனைக் கொடுப்பார். சுக்கிரன் டிச.29ல் கும்ப ராசிக்கு மாறினாலும் அவரால் மாதம் முழுவதும் நற்பலன் உண்டாகும். தற்போது சாதகமற்ற இடத்திலுள்ள புதன் டிச.19 முதல் வக்ரம் அடைந்து விருச்சிக ராசிக்கு வருகிறார். இதனால் நற்பலன் உண்டாகும். அதன் பின் ஜன.8ல் வக்ரம் நிவர்த்தி அடைந்து 12ம் இடத்திற்கு மாறுவதால் நன்மை தர மாட்டார். 12ல் உள்ள சூரியன், 2ல் உள்ள செவ்வாய், கேது, 8ல் உள்ள ராகு ஆகியோரால் சுமாரான பலன் கிடைக்கும். சனி, குருவின் பலத்தால் புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பொன், பொருள் சேரும். பெண்கள் உறுதுணையாக இருப்பர். கையில் பண ப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத் தேவை அனைத்தும் பூர்த்தியாகும். குடும்ப வாழ்வில் பல்வேறு முன்னேற்றங்களை காணலாம். பெண்களால் நன்மை வந்து சேரும். டிச.18க்கு பிறகு கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். விருந்து விழா என அடிக்கடி சென்று வருவீர்கள். மாதப் பி ற்பகுதியில் சுக்கிரனால் ஆடம்பர பொருட்களை வாங்க வாய்ப்பு உண்டு. டிச.31, ஜன.1ல் சகோதரர் வகையில் நன்மை கிடைக்கும். டிச.25,26,27ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஜன.7,8ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு வர வாய்ப்புண்டு. அப்போது சற்று ஒதுங்கி இருக்கவும். செவ்வாயால் சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம்.
தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் தரும் மாதமாக அமையும். எதிரிகளின் தொல்லையை எளிதில் முறியடிப்பீர்கள். கூட்டாளிகளிடையே ஒற்றுமை உண்டாகும். புதிய தொழில் முயற்சியில் வெற்றி உண்டாகும். சிலர் வியாபாரத்தை விரிவுபடுத்தவும் வாய்ப்புண்டு. பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். சுக்கிரனால் டிச.28க்கு பிறகு வியாபாரிகளுக்கு அரசு வகையில் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். டிச. 28,29,30, ஜன.2,3ல் சந்திரனால் சிறு தடைகள் ஏற்படலாம். டிச.16, ஜன.11,12ல் எதிர் பாராத வகையில் வருமானம் கிடைக்கும். சூரியனால் பொருள் விரயம், நிர்வாகச் செலவும் அதிகரிக்கலாம். எனவே பணவிஷயத்தில் கவனம் தேவை.
பணியாளர்கள் மாதத் தொடக்கத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும் அதற்குரிய வருமானம் கிடைக்கும். விடாமுயற்சி இருந்தால் மட்டுமே ÷ காரிக்கைகள் நிறைவேறும். டிச.19 முதல் ஜன. 8 வரை அரசு ஊழியர்கள் பணியில் நல்ல வளர்ச்சி காண்பர். தனியார் துறையில் வேலை பார்ப் பவர்களுக்கு புதிய பதவி தேடி வரும். டிச.23,24ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும். சூரியனால் சிலருக்கு திடீர் இடமாற்றம், பணிமாற்றம் வரவும் வாய்ப்புண்டு.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கப் பெறுவர். டிச.28க்கு பிறகு அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறையாது. தொண்டர்கள் வகையில் பணம் செலவழிக்க நேரிடலாம்.
மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரை மூலம் முன்னேற வழி காணலாம். புதன் சாதகமான இடத்தில் இருப்பதால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம்.
விவசாயிகள் நல்ல வருமானத்தை காணலாம். மானாவாரி பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த பலனைக் காணலாம். வழக்கு விவகாரத்தில் எதிர்பார்த்த முடிவு தள்ளி போகும்.
பெண்கள் வாழ்வில் சிறப்படைவர். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பைப் பெறுவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனைப் பெறுவர். டிச.17,18 ஜன.13 ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமைந்திருக்கும். சகோதரிகள் வகையில் உதவி கிடைக்கும். ஜன.4,5,6ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.
நல்ல நாள்: டிச.16,17,18,23,24,25,26,27, 31, ஜன. 1,4,5,6,11,12,13
கவன நாள்: டிச.19,20 சந்திராஷ்டமம் இந்த நாட்களில் அனாவசியமாக எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும். சுபநிகழ்ச்சி குறித்த ÷ பச்சைத் தவிர்க்கலாம்.
அதிர்ஷ்ட எண்: 3,4,7 நிறம்: மஞ்சள் , பச்சை
பரிகாரம்: தினமும் சூரிய தரிசனம் செய்யுங்கள். செவ்வாய்க்கிழமையில் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுங்கள். ராகுவுக்கும் கேதுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். ராகு காலத்தில் பைரவருக்கு பூஜை செய்யலாம். துர்க்கை வழிபாடு வளர்ச்சிக்கு துணை நிற்கும்.
மேலும்
ஆடி ராசி பலன் (17.7.2025 முதல் 16.8.2025 வரை) »