பதிவு செய்த நாள்
14
டிச
2016
02:12
மற்றவர் கருத்துக்கும் மதிப்பளிக்கும் தனுசுராசி அன்பர்களே!
செவ்வாயும், கேதுவும் ராசிக்கு 3ம் இடத்தில் இணைந்திருப்பது நற்பலனைக் கொடுக்கும். தற்போது மகர ராசியில் இருக்கும் சுக்கிரன் டிச.29ல் மகர ராசிக்கு மாறுகிறார். இவ்வாறு மாறினாலும் அவரால் நன்மை கிடைக்கவே செய்யும். சூரியன் 12ல் இருந்து உங்கள் ராசிக்கு வந்தாலும், அவரால் நன்மை கிடைப்பது சற்று கடினம் தான். புதன் டிச. 19ல் வக்ரம் அடைந்து விருச்சிகத்திற்கு சென்றாலும், அதன் பின் ஜன.9ல் வக்ர நிவர்த்தி அடைகிறார். 9ல் ராகு, 10ல் குரு, 12ல் சனி, ராசியில் உள்ள செவ்வாய் ஆகியோரால் சுமாரான பலன் உண்டாகும். சனியின் 7ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளதால் எதிர்பார்ப்பு நிறைவேற வாய்ப்புண்டாகும். இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு மனநிறைவு காண்பீர்கள். புதிய முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் மேம்படும். சூரியனால் வீண் அலைச்சலும், சோர்வும் ஏற்பட வாய்ப்புண்டு. செல்வாக்கு பாதிக்கப்படலாம். உடல்நலக்குறைவு அவ்வப்போது உண்டாகலாம். டிச.19 முதல் ஜன.8 வரை புதனால் முயற்சியில் தடைகளை சந்திக்க ÷ நரிடலாம். குடும்பத்தினரின் ஒத்துழைப்பால் வீட்டில் நிம்மதி நிலைத்திருக்கும். மனைவி மற்றும் குழந்தைகளின் ஆதரவு வளர்ச்சிக்கு வழிவகுக்கும். புதிய வீடு, மனை,வாகனம் வாங்கும் யோகமுண்டாகும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வரும் பாக்கியம் உண்டாகும். டிச.28க்கு பிறகு பிரிந்த தம்பதியர் மீண்டும் ஒன்று சேரும் சூழ்நிலை உண்டாகும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். டிச.28,29,30ல் பெண்கள் மிகவும் உதவிகரமாக செயல்படுவர். அவர்களால் பொன், பொருள் சேரும். டிச.23,24ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஜன.4,5,6ல் அவர்களின் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இ ருப்பது நல்லது.
தொழில், வியாபாரத்தில் லாபம் படிப்படியாக அதிகரிக்கும். அரசாங்க வகையில் நன்மை கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அவ்வப்போது வீண் அலைச்சல், தொழில் போட்டி குறுக்கிடலாம். புதிய தொழில் முயற்சி தள்ளிப்போனாலும் நன்மை உண்டாகும். பண விஷயத்தில் அடுத்தவரை நம்ப வேண்டாம். டிச. 25,26,27,31 ஜன.1ல் சந்திரனால் தடைகள் குறுக்கிடலாம். ஆனால், ஜன.9,10ல் எதிர்பாராமல் அதிர்ஷ்டவசமாகப் பணம் கிடைக்கும்.
பணியாளர்கள் எதிர்பார்த்த கோரிக்கை நிறைவேறும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். தனியார் துறையில் இருப் பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கலாம். ஆனால், வருமானத்திற்கு குறைவிருக்காது. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது நல்லது. சுக்கிரனால் டிச.28க்குப் பிறகு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. ஜன.8க்கு பிறகு சக ஊழியர்களின் ஆதரவு நல்ல முறையில் கிடைக்கும். டிச.21,22 நன்மை தரும் நாட்களாக அமையும்.
கலைஞர்கள் வாழ்வில் முன்னேற்றம் காணலாம். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும்.
அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். சிலருக்கு புதிய பதவியும் கிடைக்கும்.
மாணவர்கள், புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அக்கறையுடன் படிப்பது நல்லது. ஆசிரியர்களின் அறிவுரையை பின்பற்றுவது வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
விவசாயிகளுக்கு ஆதாயம் அதிகரிக்கும். குறிப்பாக கடலை மற்றும் கிழங்கு வகையில் நல்ல மகசூல் கிடைக்கப் பெறுவர். சிலர் நவீன கருவிகள் மூலம் பணியை மேம்படுத்தி வளர்ச்சியடைவர். புதிய சொத்து வாங்கும் வண்ணம் கைகூடும். வழக்கு, விவகாரத்தில் சாதகமாக முடிவு கிடைக்கும். இழந்த சொத்து மீண்டும் கிடைக்கும்.
பெண்கள் புத்தாடை, அணிகலன்கள் பெற்று வாழ்வில் குதுõகலம் அடைவர். புது மணத்தம்பதியருக்கு குழந்தைப்பேறு உண்டாகும். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர்.
நல்ல நாள்: டிச.16,21,22,23,24,28,29,30, ஜன.2,3,9,10,11,12
கவன நாள்: டிச.17,18, ஜன.13 சந்திராஷ்டமம். இந்த நாட்களில் அனாவசியமாக எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும். சுபநிகழ்ச்சி குறித்த பேச்சுவார்த்தையைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட எண்: 3,7 நிறம்: சிவப்பு, வெள்ளை
பரிகாரம்: நவக்கிரகங்களை வழிபடுவது அவசியம். துர்க்கை வழிபாடு முன்னேற்றத்திற்கு துணை நிற்கும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலை சாத்தி அர்ச்சனை செய்யுங்கள். புதன் கிழமை குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.