அதிகமான அகங்காரம், அதிகமாகப் பேசுதல், பிறருக்குக் கொடாமை, கோபம், சுயநலம், நண்பருக்குத் துரோகம் செய்தல் ஆகிய ஆறு விஷயங்களும் கூர்மையான கத்திகள் போல் மனிதனைக் கொன்றுவிடுகின்றன. ஆகவே, இதுபோன்ற குணங்களை விட்டொழிக்கவேண்டும் என்று திருதராஷ்டிரனுக்கு விதுரர் அறிவுறுத்தியதாகச் சொல்கிறது பாரதம். இது, நமக்கான அறிவுரையும்தான்.