இறைவனை முப்பத்து முக்கோடி தேவர்களும் வழிபட்டார்கள் என்றெல்லாம் பெரியோர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். படித்திருப்போம். அதென்ன... முப்பத்து முக்கோடி கணக்கு? ஆதித்யர் 12, ருத்ரர் 11, அஸ்வினி தேவர்கள் 2, வசுக்கள் 8 ஆகியோர் மொத்தம் 33 பேர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் கோடி வகை பரிவாரங்கள் இருப்பதால், முப்பத்து முக்கோடி தேவர்கள் எனப் பெயர்.