Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) பொறுமையாய் இருங்க! புகழ் வந்து சேருமுங்க! கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ...
முதல் பக்கம் » தை ராசி பலன் (15.1.2026 முதல் 12.2.2026 வரை)
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) செலவானால் ஆகட்டுமே! அது சுபச்செலவு தானே!
எழுத்தின் அளவு:
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) செலவானால் ஆகட்டுமே! அது சுபச்செலவு தானே!

பதிவு செய்த நாள்

13 பிப்
2017
12:02

சமயோசித புத்தி கொண்ட  மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் பிற்பகுதியில் நன்மை  அதிகரிக்கும். பிப். 26க்கு பிறகு  செவ்வாய் சாதகமான இடத்திற்கு வருகிறார். புதன் பிப்.16 வரையும், மார்ச் 5க்கு பிறகும் நன்மை அளிப்பார்.  சனி, ராகு ஆகியோரால் நன்மை மாதம் முழுவதும் தொடரும். இதனால் பொருளாதார வளம் பெருகும். தற்போது துலாம் ராசியில் இருக்கும் குரு மார்ச் 10ல்   வக்ரம் அடைந்து கன்னி ராசிக்கு மாறுகிறார். அது வரை அவரால் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.  திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவேறும்.  ஆனால் எதிர்பார்த்ததை விட செலவு அதிகரிக்கும். புதிய வீடு, -மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும். பெண்களால் மேன்மை உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சூரியனால் சமூக மதிப்பு எதிர்பார்த்தபடி இருக்காது. உங்கள் மீதான  அவப்பெயர் மார்ச் 5க்கு பிறகு மறையும். அதன்பின் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மாத தொடக்கத்தில் முயற்சியில் வெற்றி உண்டாகும். ஆடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டு.  பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். பிப்.14,15ல்  உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு உருவாகலாம். ஆனால், மார்ச் 2,3ல் உறவினர் வருகையால் நன்மை உண்டாகும். மார்ச் 6,7,8ல்  பொருளாதார வளம் மேம்படும். சகோதரிகளிடம் எதிர்பார்த்த உதவி  கிடைக்கும். பிப்.26க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மார்ச் 5க்கு பிறகு  சந்தோஷமான நிகழ்வுகள் குடும்பத்தில் நடந்தேறும். பெண்களின் ஆதரவு சிறப்பான முறையில் இருக்கும். பொன், பொருள் சேரும். சிலருக்குத்  தோல், கண் தொடர்பான பிரச்னை உருவாகலாம். பிப். 26 க்கு பிறகு பூரண குணம் உண்டாகும்.

தொழில், வியாபாரம் சிறப்படையும். லாபம் படிப்படியாக உயரும். புதிய வியாபாரத்தில் ஓரளவு அனுகூலத்தை எதிர்பார்க்கலாம். மார்ச்  4,5,9,10ல்  முயற்சியில் தடை குறுக்கிடலாம்.  பிப்.19,20ல் தடையை முறியடித்து  வெல்லும் ஆற்றல் உண்டாகும்.  மார்ச் 5க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகத்திலும் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும்.

பணியாளர்களுக்கு விடாமுயற்சி தேவைப்படும். குருவால் உங்கள் திறமைக்கு தகுந்த அங்கீகாரம் பணியிடத்தில் கிடைக்காமல் போகாது.  தக்க சமயத்தில் நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். பிப்.28, மார்ச் 1ல் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம். மார்ச் 5 க்கு பிறகு பணிச்சுமையில் இருந்து விடுபட வாய்ப்புண்டு.  சக பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பிப்.26க்கு பிறகு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.  பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம்.

கலைஞர்கள் சீரான வளர்ச்சி பெறுவர். அவ்வப்போது தொழிலில் போட்டி
குறுக்கிடலாம்.

அரசியல்வாதிகள் சுமாரான பலன் பெறுவர். பிப். 26க்கு பிறகு நன்மை உண்டாகும். தொண்டர்களின் ஆதரவு சிறப்பாக அமையும்.

மாணவர்களுக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல்  பயன்  உள்ளதாக அமையும். பிப்.16,17,18ல் சிறு தடை, குழப்பம் ஏற்படலாம்.மார்ச் 5ல்  புதன் சாதகமான இடத்திற்கு வருவதால் கல்வியில் வளர்ச்சி உண்டாகும்.

விவசாயிகள் நல்ல பொருளாதார வளம்  காணலாம். புதிய சொத்து வாங்க
நினைப்பவர்கள் பிப்.26க்கு பிறகு முயற்சிப்பது நல்லது. பக்கத்து நிலம்  தொடர்பான பிரச்னை இனி இருக்காது.  வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும்.

பெண்கள் சுமாரான பலனைப் பெறுவர். பிப். 15  முதல் மார்ச் 4 வரை அக்கம் பக்கத்தினர் வகையில் சிரமம் குறுக்கிடலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுப்பது  நல்லது. பிப்.13, மார்ச் 11,12 ஆகிய நாட்களில் புத்தாடை, அணிகலன்கள் வாங்க வாய்ப்புண்டு. பெற்றோர் வீட்டில் இருந்து உதவி கிடைக்கப்பெறலாம். பிப்.21,22, 23ல்  விருந்து, விழா என சென்று வருவீர்கள். பிள்ளைகளின் வழியில் நன்மையை எதிர்பார்க்கலாம்.

நல்ல நாள்: பிப்.13,19,20,21,22,23,28 மார்ச்1,2,3, 6,7,8,11,12

கவன நாள்: பிப். 24,25 சந்திராஷ்டமம். இந்த நாட்களில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.

அதிர்ஷ்ட எண்: 3,7 நிறம்: நீலம், கருப்பு

பரிகாரம்: ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு நடத்துங்கள். தினமும் சூரியநமஸ்காரம்  செய்வது நல்லது. ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்வது பலன்அளிக்கும். பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுங்கள்.

 
மேலும் தை ராசி பலன் (15.1.2026 முதல் 12.2.2026 வரை) »
temple news
மேஷம்: அசுவினி..: தை பிறந்தால் வழி பிறக்கும் என்று காத்திருந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். ... மேலும்
 
temple news
ரிஷபம்: கார்த்திகை 2,3,4 ம் பாதம்:  சுயமாக சிந்தித்து வெற்றி பெறும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் ... மேலும்
 
temple news
மிதுனம்: மிருகசீரிடம் 3,4 ம் பாதம்:தன்னம்பிக்கையுடன் செயல்படும் உங்களுக்கு பிறக்கும் தை மாதத்தில் ... மேலும்
 
temple news
கடகம்: புனர்பூசம் 4 ம் பாதம்: நாளை வருவதை முன்னதாக அறிந்து செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் ... மேலும்
 
temple news
சிம்மம்: மகம்..: தெய்வமே துணை என்ற எண்ணமுடன் வாழும் உங்களுக்கு,  பிரகாசமான மாதமாக தை இருக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar