Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ... சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ஆதாயத்தை அள்ளுங்க! கோபத்தை தள்ளுங்க! சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ...
முதல் பக்கம் » ஆடி ராசி பலன் (17.7.2025 முதல் 16.8.2025 வரை)
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) பொறுமையாய் இருங்க! புகழ் வந்து சேருமுங்க!
எழுத்தின் அளவு:
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) பொறுமையாய் இருங்க! புகழ் வந்து சேருமுங்க!

பதிவு செய்த நாள்

13 பிப்
2017
12:02

கண்ணியம் மிக்க கடக ராசி நேயர்களே!

உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் உள்ள சுக்கிரன் தொடர்ந்து நற்பலனைக் கொடுப்பார். தடைகளை உடைத்தெறிந்து எண்ணங்களை நிறைவேற்றி வைப்பார். புதன் பிப்.16-ல் இருந்து மார்ச் 5- வரை நல்ல பலன் தருவார். பணப் புழக்கத்திற்கு எந்த குறையும் இருக்காது. குரு பகவானால் இருந்து வந்த  மனஉளைச்சல், உறவினர் வகையில் வீண் பகை முதலியன மார்ச் 10-க்கு பிறகு மறையும். ஆனால் அதன்பின் அவரால் முயற்சிகளில் தடை ஏற்படும். சுக்கிரனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால்  பொருளாதார வளம் கூடும்.  கணவன், -மனைவி இடையே இருந்து வந்த பிரச்னை பிப்.16-க்கு பிறகு மறையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். சுப சம்பவங்கள் நடக்கும். உங்களின் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நவீன பொருட்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். சகோதரிகள் வகையில் முன்னேற்றமான பலனை எதிர்பார்க்கலாம். மார்ச் 9,10-ல் அவர்களால் நன்மை அதிகம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். பிப்.16,17,18-ல்  உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். ஆனால் மார்ச் 4,5-ல் அவர்களால் நன்மை கிடைக்கும். பொறுமையுடனும், விட்டுக் கொடுத்தும் சென்றால் வாழ்க்கை பிரச்னை இன்றி நகரும்.

தொழில், வியாபாரம் நல்ல முன்னேற்றம் அடையும். லாபத்திற்கு குறைவிருக்காது. இருப்பினும் எதிலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம். அரசு வகையில் அனுகூலம் இல்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். பிப்.21,22, 23-ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.  போட்டியாளர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் இருக்கும். ஆனால் பிப்.13, மார்ச் 6,7,8,11,12-ல் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம். இந்நாட்களில் கல்லாப்பெட்டி உங்கள் நேரடி பார்வையில் இருக்கட்டும். மார்ச் 5-க்கு பிறகு புதிய பங்குதாரர்களை சேர்க்க நேர்ந்தால், எச்சரிக்கையாக அவர்களைப் பற்றி நன்றாக விசாரித்து சேர்த்துக் கொள்ளவும்.

பணியாளர்கள் புதனின் துணையோடு உயர்ந்த நிலையை எட்டி பிடிக்கலாம். வேலையில் திருப்தியும், நிம்மதியும் காண்பீர்கள். மேல் அதிகாரிகள் உதவிகரமாக இருப்பர். சகபெண்ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். குருவின் நிலை காரணமாக எதிர்பார்த்த பதவி உயர்வு  கிடைக்க தாமதம் ஆகலாம்.  மார்ச் 2,3-ந் தேதிகளில் எதிர்பாராத நன்மை கிடைக்க பெறலாம். சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். மார்ச் 5-க்கு பிறகு வேலையில் பொறுமை காட்டினால் புகழுக்குரிய நிலையை எட்டுவீர்கள். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு  இடமாற்றம் வர வாய்ப்புண்டு.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பாராட்டு, புகழ்  வரும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் ஆகலாம்.

மாணவர்களுக்கு போட்டிகளில் வெற்றி கிடைக்கும். மார்ச் 5- வரை படிப்பில் தடங்கல் இருக்காது. அதன் பிறகு மெத்தனமாக இருக்க வேண்டாம்.  சிரத்தை எடுத்து படித்தால் தான் பலன் கிடைக்கும். சிலருக்கு சகவாசம் காரணமாக வெளியே சுற்ற  மனம் அலையும். அவர்கள் அதை விட்டு படிப்பில் கவனம் செலுத்தினால் தான் தேறலாம்.

விவசாயிகள் நல்ல மகசூல் பெறுவர் கருப்பு நிற தானிய வகைகளில்  எதிர்பார்த்த  வருமானம் கிடைகும். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் இல்லை. வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்களால் குடும்பம் சிறப்படையும்.வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.  மாதத் தொடக்கத்தில் வேலைப்பளு அதிகம் இருக்கும். பிப்.14,15,16 மார்ச் 13-ல் புத்தாடை, நகை வாங்கலாம். பொருளாதார வளம் மேம்படும். சகோதரர்களால் நற்சுகம் ஏற்படும். பிப்.26க்கு பிறகு சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. கவனம் தேவை. உடல்நலம் நன்றாக இருக்கும்.

நல்ல நாள்: பிப்.14,15,21,22,23,24,25, மார்ச் 2,3,4,5,9,10

கவன நாள்: பிப். 26,27- சந்திராஷ்டமம். இந்த நாட்களில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.

அதிர்ஷ்ட எண்: 4,8. நிறம்: பச்சை,  வெள்ளை

பரிகாரம்: தினமும் காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள். ராகு கால பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். புதன்கிழமை குல தெய்வத்தை வழிபட்டு
பசுவுக்கு பசுந்தழை போடுங்கள் இதனால் குடும்பத்தில் பிரச்னைகள் அகலும்.

 
மேலும் ஆடி ராசி பலன் (17.7.2025 முதல் 16.8.2025 வரை) »
temple news
அசுவினி பிறர் ஆச்சரியப்படும் வகையில் முன்னேற்றம் அடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்; நினைத்ததை சாதிப்பதில் முதலிடம் வகிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்; புத்தி சாதுரியத்தால் எதையும் சாதித்து வரும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்; மனசாட்சியின்படி செயல்பட்டு வரும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் கவனமாக ... மேலும்
 
temple news
மகம்: மனதில் எண்ணியதை உடனே நடத்த வேண்டும் என்ற வேகம் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆடி நிதானமாக செயல்பட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar