Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) பிரிந்த குடும்பம் சேரும் பிரச்னைக்கு தீர்வு வரும்! கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ...
முதல் பக்கம் » தை ராசி பலன் (15.1.2026 முதல் 12.2.2026 வரை)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ஆதாயத்தை அள்ளுங்க! கோபத்தை தள்ளுங்க!
எழுத்தின் அளவு:
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ஆதாயத்தை அள்ளுங்க! கோபத்தை தள்ளுங்க!

பதிவு செய்த நாள்

13 பிப்
2017
12:02

சிந்தனையில் புதுமை மிக்க சிம்ம ராசி அன்பர்களே!

சுக்கிரனால் மாதம் முழுவதும் நன்மை உண்டாகும். புதன் பிப். 16 வரையும்,  மார்ச் 5க்கு பிறகும் நன்மை தர காத்திருக்கிறார். குரு மார்ச் 10ல்  வக்ரம் அடைந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.  இதனால் கடந்த காலத்தில் இருந்த மந்த நிலை மாறும். மனதில் துணிச்சல் பிறக்கும். வருமானம் படிப்படியாக  அதிகரிக்கும். பகைவர்கள் உங்களைச்  சரணடையும் நிலை உருவாகும். குடும்பத்தில் வசதி வாய்ப்பு பெருகும். பெண்கள்  ஆதரவுடன் செயல்படுவர். மாதத் தொடக்கத்தில் புதிய முயற்சியில் வெற்றி உண்டாகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடந்தேறும். குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.  பிப். 16க்கு பிறகு கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு உருவாகலாம்.  கோபத்தை தவிர்த்து ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும்.  மார்ச் 5க்கு பிறகு கணவன்-, மனைவி இடையே இருந்த பிரச்னை மறையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். புத்தாடை அணிகலன்கள் வாங்க யோகமுண்டு.  பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். பிப்.19,20ல் உறவினர் வகையில் இருந்து சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. ஆனால் மார்ச் 6,7,8ல் உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும். பிப்.13, மார்ச்  11,12ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள்.  சகோதரர்களால் நன்மை உண்டாகும். சூரியனால்  வீண் அலைச்சல் அதிகரிக்கும். வயிறு தொடர்பான பிரச்னை வரலாம். பிப்.26க்கு பிறகு பூரண குணம் பெறும். மார்ச் 2,3ல் பயணத்தின் போது சற்று கவனம் தேவை.       
தொழில், வியாபாரம்  மாதத் தொடக்கத்தில் சிறப்பாக இருக்கும். பிற்பகுதியில் மறைமுகப்போட்டி குறுக்கிட்டாலும்  லாபம் சிறப்பாக இருக்கும்.  பெண்களைப் பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகத்தில்  ஆதாயம் அதிகரிக்கும். மார்ச் 5க்கு பிறகு புதிய தொழில் தொடங்கலாம். பிப்.9,10,14,15, மார்ச் 13ல்  சிறு தடைகள் குறுக்கிடலாம்.  பிப்.24,25ல் திடீர் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.

பணியாளர்கள் மாதத் தொடக்கத்தில் பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில்  செல்வாக்கு அதிகரிக்கும். பிப்.16க்கு பிறகு விடாமுயற்சியுடன்  உழைக்க வேண்டியதிருக்கும். அதே நேரம் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகாது. சக ஊழியர்களின் ஒத்துழைப்பு  கிடைக்கும். வேலை விஷயமாக  குடும்பத்தை பிரிந்தவர்கள் மார்ச் 5 க்கு பிறகு ஒன்று சேர்வர். மார்ச் 4,5  நன்மை தரும் நாட்களாக அமையும். ராகுவால்  நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.

கலைஞர்கள் சாதகமான பலனைக் காண்பர். புகழ், பாராட்டுக்கு குறைவிருக்காது. உங்கள் முன்னேற்றத்திற்கு பெண்கள் உறுதுணையாக இருப்பர்.

அரசியல்வாதிகள் சீரான வளர்ச்சி காண்பர். பிப்.21,22,23ல் தடைகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள்.

மாணவர்கள் சுமாரான பலன் கிடைக்கப் பெறுவர். மார்ச் 5க்கு பிறகு புதனால் கல்வி வளர்ச்சி உண்டாகும். போட்டியில் பங்கேற்று வெற்றி வாகை சூடி மகிழ்வீர்கள். மார்ச்10ல் குரு வக்ரம் அடைந்து சாதக இடமான கன்னி ராசிக்கு மீண்டும்  வருவதால் வாழ்வில் வசந்தக் காற்று வீசத் தொடங்கும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் யோகம் உண்டாகும்.

விவசாயிகள் பழ வகைகள், பயறு வகைகள், எள், கரும்பு போன்ற பயிர்கள் மூலம் நல்ல வருமானம் காணலாம். கால்நடைவளர்ப்பில் எதிர்பார்த்த ஆதாயம் டைக்கும். வழக்கு விவகாரத்தில் மெத்தனப் போக்கு  வேண்டாம்.

பெண்களால் குடும்பம் சிறப்படையும். கணவரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும். அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். பிப்.26,27ல் முயற்சியில் வெற்றி உண்டாகும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.  பிப்.16,17,18ல்  ஆடம்பர பொருள் வாங்க யோகமுண்டு.  பிறந்த வீட்டில் இருந்து சீதனப்பொருள் கிடைக்கப் பெறலாம். மார்ச் 5க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். அதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.

நல்ல நாள்: பிப்ரவரி 13,16,17,18,24,25, 26,27,மார்ச் 4,5,6,7,8,11,12

கவன நாள்: பிப்.28, மார்ச் 1 சந்திராஷ்டமம். இந்த நாட்களில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.

அதிர்ஷ்டஎண்: 5,7 நிறம்: வெள்ளை, பச்சை

பரிகாரம்: தினமும் காலையில் நீராடி சூரியனை வழிபடுங்கள்.  சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வணங்குங்கள். முருகனை வழிபட்டால் உடல்நலம் மேம்படும். பவுர்ணமியன்று சிவனை வழிபட்டால் தொழிலில் லாபம் பெருகும்.

 
மேலும் தை ராசி பலன் (15.1.2026 முதல் 12.2.2026 வரை) »
temple news
மேஷம்: அசுவினி..: தை பிறந்தால் வழி பிறக்கும் என்று காத்திருந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். ... மேலும்
 
temple news
ரிஷபம்: கார்த்திகை 2,3,4 ம் பாதம்:  சுயமாக சிந்தித்து வெற்றி பெறும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் ... மேலும்
 
temple news
மிதுனம்: மிருகசீரிடம் 3,4 ம் பாதம்:தன்னம்பிக்கையுடன் செயல்படும் உங்களுக்கு பிறக்கும் தை மாதத்தில் ... மேலும்
 
temple news
கடகம்: புனர்பூசம் 4 ம் பாதம்: நாளை வருவதை முன்னதாக அறிந்து செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் ... மேலும்
 
temple news
சிம்மம்: மகம்..: தெய்வமே துணை என்ற எண்ணமுடன் வாழும் உங்களுக்கு,  பிரகாசமான மாதமாக தை இருக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar