நீறில்லா நெற்றி பாழ்’ என்று திருநீற்றின் மகிமையை அவ்வையார் குறிப்பிடுகிறார். சிவனை மனதில் நிலை நிறுத்தவும், மனிதன் கடைசியில் பிடி சாம்பல் ஆவான் என்ற நிஜத்தை உணரவும் திருநீறு பூசுகின்றனர். வாழ்வு நிலையற்றது என்பதை உணர்ந்தால், அகங்காரம் நீங்குவதோடு மனம் துõய்மை பெறும். திருநீறுக்கு விபூதி’ என்று பெயருண்டு. இதற்கு உயர்ந்த செல்வம்’ என்று பொருள். சிவனருளைக் காட்டிலும் உயர்ந்த செல்வம் வேறில்லை என்பதும் திருநீறு சொல்லும் தத்துவம்.