மக்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்துக் கொள்ளும் சக்தி, மாவிலைக்கு உண்டு. கிருமி நாசினியான இது, காய்ந்து, உலர்ந்து விட்டாலும், அதன் சக்தி குறையாது. இதற்கு, துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தி உண்டு. மேலும், மாவிலை அழுகுவது கிடையாது; காய்ந்தே உலரும். இதுபோல, வாழ்க்கையும், இடையிலேயே அழிந்து விடாமல், நீண்ட காலம் முழுமை பெற வேண்டும் என்பதற்காகவே, மாவிலை தோரணம் கட்டுகிறோம்.