திருவண்ணாமலை கிரிவலம் வந்தால், எல்லா உலகங்களையும் வலம் வந்ததற்குச் சமம். நரகத்தில் ஏழு வகை இருக்கிறது. அங்கே போய் விடாமல் பிறப்பற்ற நிலையை இது தருகிறது. இந்த மலையை வலம் வந்தால் காசி, அயோத்தி, மதுரை, மாயாபுரி, அவந்தி, துவாரகை, காஞ்சிபுரம் முதலான புண்ணிய நகரங்களில் 432 கோடி ஆண்டுகள் தங்கியிருந்து தவம் செய்த பலன் கிடைக்கும். இந்த மலையை பவுர்ணமியன்று வலம் வந்தால் மனோசக்தி அதிகரிக்கும். திங்கட்கிழமை வலம் வந்தால் உடனடியாக சிவன் அருள் கிடைக்கும். வாகனங்களில் வலம் வருவதை தவிர்க்க வேண்டும்.