சிரஞ்சீவிகள் என்றால் காலத்தை வென்றவர்கள்; எப்போதும் வாழ்கிறவர்கள்; மரணமற்றவர்கள் என்று பொருள். நம் புராண இதிகாசங்களில் ஏழுபேரை சிரஞ்சீவிகள் என்று குறிப்பிடுகிறோம். இவர்கள் எங்கோ மேரு மலையில் மறைந்து வாழ்பவர்கள் அல்ல. குணங்களால் நம்மோடு வாழ்பவர்கள்தான். அவர்களின் அம்சமாக யார் யார் விளங்குகிறார்கள்?
அஸ்வத்தாமா: உலகில் எந்த மனிதரிடத்தில் மந்திரபலம் இருக்கிறதோ அவர்கள் அஸ்வத்தாமனின் அம்சம்.
மகாபலி: மன்னர்கள் அல்லது ஆட்சியாளர்கள் பூமியில் நியாய வழிகளில் சம்பாதித்த பொருள்களால் நாட்டைக் காப்பாற்றுபவர் எவரோ அவர்கள் மகாபலியின் அம்சம்.
கிருபாச்சாரியார்: எந்த மனிதர்கள் கோழைத்தனமில்லாமல் இருக்கிறார்களோ, தைரியத்துடன் நேர்மையாகப் போர் புரிகிறார்களோ அவர்கள் கிருப்பாச்சாரியாரின் அம்சம்.
ஆஞ்சநேயர்: சுத்த மனதுடன் எடுத்த காரியத்தைச் சரியாக முடித்து யார் நல்ல வீரராக விளங்குகிறார்களோ? அவர்கள் ஆஞ்சநேயர் அம்சம்.
விபீஷணன்: ராமபக்தராகவும், சாந்த குணமுடையவர்களாகவும் யார் உள்ளனரோ அவர்கள் விபீஷணனின் அம்சம்.
பரசுராமர்: பூமியில் எந்த வீரர்கள் கோபத்துடன் கூடுபவர்களோ, அந்த கோபத்தில் அர்த்தம் உள்ளதோ, அவர்கள் பரசுராமரின் அம்சம்.
வியாசர்: சமஸ்கிருத புலமை எவரிடம் உள்ளதோ, எவர் ராமர், ஈஸ்வரன், கிருஷ்ணர் இவர்களைத் துதிக்கிறார்களா அவர்கள் வியாசரின் அம்சமுடையவர்கள்.