Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பணம் பத்தும் செய்யும் இதில் பத்து ... குலதெய்வம் தெரியாதவர்கள் எந்த சாமியைக் கும்பிடுவது? குலதெய்வம் தெரியாதவர்கள் எந்த ...
முதல் பக்கம் » துளிகள்
திருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு அடிகள் நடப்பதற்கு என்ன பொருள்?
எழுத்தின் அளவு:
திருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு அடிகள் நடப்பதற்கு என்ன பொருள்?

பதிவு செய்த நாள்

28 பிப்
2017
05:02

சமஸ்கிருதத்தில் இதை ‘சப்தபதி’ என்று கூறுவார்கள். அதாவது ஏழு அடிகள் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் சேர்ந்து நடந்து வருவதாகும். அவ்வாறு ஏழு அடிகள் நடக்கும் போது மாப்பிள்ளை பெண்ணிடம் இறைவன் உனக்கு துணையிருப்பான் என்று கீழ்கண்டவாறு தனது பிரார்த்தனையை சாஸ்திரங்கள் கூறுகிறது.  

முதல் அடியில்: பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்
இரண்டாம் அடியில்: ஆரோக்கியமாக வாழ வேண்டும்
மூன்றாம் அடியில்: நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்
நான்காவது அடியில்: சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்
ஐந்தாவது அடியில்: லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்
ஆறாவது அடியில்: நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்
ஏழாவது அடியில்: தர்மங்கள் நிலைக்க வேண்டும். இந்த சம்பிரதாயத்தில் மனிதர்களிடம் இருக்கும் மிகவும் சூட்ஷமமான மனோவியல் விஷயத்தை இந்து தர்மத்தில் உணர்த்தியுள்ளார்கள் நம் முன்னோர்கள். இரண்டு நபர்கள் ஒன்றாக ஏழு அடிகள் நடந்தால் அவர்களுக்குள் சினேகிதம் உண்டாகும் என்பது சாஸ்திரம்.

உதாரணமாக நாம் சாலையில் நடக்கும் போது அறிமுகமில்லாத ஒருவரை கடக்கும் போது சில விநாடிகள் ஒன்றாய் நடக்க நேர்ந்தால் நன்றாக கவனியுங்கள். ஏழு அடிகள் நடப்பதற்குள் நாம் அவர்களை வேகமாக தாண்டிவிடுவோம் அல்லது அவர்களை முன்னே போகவிட்டுவிடுவோம். முழுமையாக ஏழு அடிகள் ஒன்றாக நடக்க மாட்டோம்.  இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும் போது அவர்களுக்குள் நடக்கும் மனோவியல் மாற்றங்கள் ஏழு அடிகளுக்குள்ளாக நடந்து விடும் என்பது ஒரு சூட்ஷமமான விஷயம். இதை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து நம் இந்து தர்மத்தில் அதை ஒரு சம்பிரதாயமாக வைத்திருப்பதை நாம் அனுபவித்து உணர வேண்டும். இந்து தர்மத்தில் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. பல நுணுக்கமான அறிவியல் மற்றும் மனோவியல் விஷயங்கள் நிறைந்தது இந்து தர்மம்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர், எண் கோண வடிவில் அழகாக அமைந்து, வாழ்வியல் தத்துவங்கள், ஒற்றுமை ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டதாகும். பல நுாற்றாண்டுகள் பழமையான, ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், கம்பம் போடுதல் நிகழ்ச்சிக்கு பின், வேப்பிலை, ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவின் போது, பக்தர்கள் உப்பு கொண்டு வந்து, பலி பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar