ஞானத்தின் குறியீடாக தட்சிணாமூர்த்தி கோலம் உள்ளது. மரநிழலில் அமர்ந்து முதிர்ந்த பக்குவத்துடன் மோனநிலையில்காட்சியளிக்கிறார். மலர்ந்த தாமரை, சலசலக்கும் நீரோடை, குளிர்ந்தபொய்கை, நிழல் தரும் மரம் இவையெல்லாம் நல்லுணர்வை ஏற்படுத்தும் இனிய சூழல்கள். அதற்காக மரத்தடியை தேடிச் செல்ல வேண்டியதில்லை. எந்த இடத்தில் வேண்டுமானாலும் நல்லுணர்வைப் பெறலாம்.