பெருமாளின் திருவடி சடாரிமீது பதிக்கப்பட்டிருக்கும். பக்தர்கள் தலைமீதும், தோள்மீதும் பெருமாளைத் தாங்குவதாக ஐதீகம். இறைசிந்தனையே மனிதனுக்கு தலையாயது என்பதை உணர்த்துவதே இதன் நோக்கம். துளசி, தீர்த்தம் ஏற்றபின்னரே சடாரியை ஏற்பர். இதைச் செய்யாமல் பெருமாள் கோயிலில் வழிபாடு நிறைவு பெறுவதில்லை.