சில குழந்தைகள் எவ்வளவு படித்தாலும் மறதி காரணமாக, தேர்வில் குறைந்த மதிப் பெண்களே பெறுவர். இந்த பிரச்னையை தீர்த்து வைப்பவராக திருவள்ளூர் அருகிலுள்ள திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் அருளுகிறார். நடராஜருக்குரிய பஞ்ச சபைகளில் முதலாவதான ரத்தின சபை இது. கயிலாயத்தில் சிவபெருமானைத் தரிசித்த காரைக் காலம்மையார், எப்போதும் அவரது திருவடியில் அமர்ந்து அவரது நாட்டியத்தைத் தரிசிக்க அருளும்படி வரம் கேட்டார். திருவாலங்காடு வந்தால் அந்த வரத்தை அருள்வதாக சிவன் தெரிவித்தார். அதன்படி காரைக்காலம்மையார் இங்கு வந்து தங்கினார். நடராஜர் சன்னதியிலேயே இவர் இருக்கிறார். பிற்காலத்தில் இங்கு வந்த சம்பந்தர், இத்தலத்தின் மகிமையை அறிந்து நடந்து வர அஞ்சினார். இதற்காக கோயிலில் இருந்து 2 கி.மீ., yµத்திலுள்ள பழையÞº என்னும் தலத்தில் தங்கினார். அன்றிரவில் சம்பந்தர் முன் தோன்றிய சிவன், ""என்னை பாட மறந்து விட்டாயா? எனக்கேட்டார். சம்பந்தர் அங்கிருந்தபடியே, ""பாடும்படி ஞாபகப்படுத்திக் கேட்ட பெருமானே!” எனக் குறிப்பிட்டு சுவாமியைப் போற்றி பதிகம் பாடினார். இவ்வாறு சம்பந்தருக்கு, பதிகம் பாட ஞாபகப்படுத்தியவர் என்பதால், மறதி பிரச்னை நீங்க இத்தலத்தில் வேண்டிக் கொள்வர். ஞாபக மறதி உள்ள குழந்தைகளை அழைத்து வந்து, சிவன், நடராஜர் சன்னதியில் வழிபட்டு செல்லலாம்.