Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) பணப்புழக்கம் துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) பரிசு மழை தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ...
முதல் பக்கம் » மாசி ராசிபலன் (13.2.2019 முதல் 14.3.2019 வரை)
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) அதிர்ஷ்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2018
16:44

விருந்தினரை உபசரித்து மகிழும் விருச்சிக ராசி அன்பர்களே!

இந்த மாதம் பிற்பகுதியில் சுக்கிரன் நற்பலனை வாரி வழங்குவார். செவ்வாய், கேது மாதம் முழுவதும் நன்மை தர காத்திருக் கின்றனர். தற்போது சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருக்கிறார். அவரால் பிற்போக்கான பலனைத் தான் நீங்கள் கண்டிருப்பீர்கள். குடும்பத்தில் பிரச்னை உருவாக்குவார். பொருளாதார இழப்பு ஏற்படலாம். அதற்காக கவலைப்பட வேண்டாம்.  சனிபகவான் சாதகமற்று இருந்தாலும் அவரின் 10-ம் இடத்துப் பார்வை  சிறப்பாக உள்ளது. இதனால் உங்களுக்கு வரும் இடையூறு அனைத்தும்  முறியடித்து வெற்றிக்கு வழிவகுப்பார். அவரால் பொன், பொருள் சேரும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செவ்வாய், கேதுவால் பக்தி மேம்படும். தெய்வ அனுகூலம் தொடர்ந்து  கிடைக்கும். முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். புதன், சூரியனால் அவப்பெயர் வர வாய்ப்பு உண்டு. எனவே வீண் விவாதம் தவிர்க்கவும். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கலாம். எனவே யாரிடமும் எச்சரிக்கையுடன் பழகவும்.

குடும்பத்துடன் புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். புதிய வீடு, மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும். ஆக.2 க்கு பிறகு சுக்கிரனால் வருமானம் அதிகரிக்கும்.  உறவினர் வருகை அடிக்கடி இருக்கும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். ஜூலை 22,23,24 ல்  அதிர்ஷ்ட வசமாக பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். ஜூலை 18,19, ஆக.14,15 ஆகிய தேதிகளில் உறவினர் வருகை யும், அவர்களின் மூலம் நன்மை கிடைக்கும். ஆனால் ஜூலை 30,31-ந் தேதிகளில் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று  ஒதுங்கி இருக்கவும். ஜூலை 27,28,29ல் ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள்.  பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். போலீஸ், ராணுவ பணியாளர்கள் உயர்ந்த நிலையை அடைவர்.

கோரிக்கைபடிப்படியாக நிறைவேறும். சிலர் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலர் திடீர்

இடமாற்றத்தை சந்திக்கலாம். மாத பிற்பகுதியில் சுக்கிரனின் பலத்தால்  நன்மை காண்பீர்கள். வீண் அலைச்சல், வேலைப்பளு குறையும். சக பெண் ஊழியர்ஆதரவுடன் செயல்படுவர். ஜூலை 17, ஆக.12,13 ஆகிய நாட்களில் இனிய அனுபவம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் படிப்படியாக உயரும். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம்.

தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். கோயில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். பகைவர் தொல்லை குறுக்கிட்டாலும் திறம்பட சமாளிப்பீர்கள். எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு எதிரி வகையில் இருந்த தொல்லை, அவப்பெயர் , போட்டிகள் முதலியன ஆக.1க்கு பிறகு மறையும்.  அதன் பிறகு முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் மக்கள் மத்தியில் நற்பெயர் காண்பர். சிலருக்கு புதிய பதவி கிடைக்க வாய்ப்புண்டு. வருமானமும் அதிகரிக்கும். ஆக. 1,2 ல் மனக்குழப்பம் மறையும். மாணவர்கள் விடாமுயற்சி யுடன் படிக்க வேண்டியதிருக்கும்.  ஆசிரியர், பெற்றோர் அறிவுரையை ஏற்பது அவசியம்.  நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.  விவசாயிகளுக்கு  மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். பெண்கள் மனம் போல ஆடம்பர பொருட்கள் வாங்குவர். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.  ஆக.1 க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். ஆக. 6,7 ஆகிய தேதிகளில் எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

* நல்ல நாள்: ஜூலை 17,18, 19,22,23,24, 27,28,29 ஆக. 3,4,5,6,7,12,13,14,15
* கவன நாள்: ஆக. 8,9 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 2,6  
* நிறம்: வெள்ளை, சிவப்பு

பரிகாரம்:
●  தேய்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாடு
●  வெள்ளிக்கிழமையில் சுக்கிரனுக்கு நெய்தீபம்
●  திங்கள் மாலையில் சிவனுக்கு வில்வார்ச்சனை

 
மேலும் மாசி ராசிபலன் (13.2.2019 முதல் 14.3.2019 வரை) »
temple
சிந்தித்து செயலாற்றி வரும் மேஷ ராசி அன்பர்களே!

சுக்கிரன் பிப்.25வரை சாதகமான நிலையில் உள்ளார் ... மேலும்
 
temple
ஊக்கத்துடன் முயற்சியில் ஈடுபடும் ரிஷப ராசி அன்பர்களே!

சூரியனும், புதனும் 10-ம் இடத்தில் ... மேலும்
 
temple
அனைவரிடமும் நட்பு பாராட்டும் மிதுன ராசி அன்பர்களே!

செவ்வாய் இந்த மாதம் சாதகமான இடத்தில் இருந்து ... மேலும்
 
temple
கடமையில் கண்ணாக இருக்கும் கடக ராசி நேயர்களே!

புதன்,சனி, குரு மாதம் முழுவதும் நற்பலன் தருவர். ... மேலும்
 
temple
சிந்தனையால் உயர்ந்து நிற்கும் சிம்ம ராசி நேயர்களே!

சுக்கிரன் பிப்.25 வரை நன்மை தருவார். அவரால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.