அன்னை காஞ்சன மாலை வருத்தத்தில் ஆழ்ந்தாள். ஒரு தாயின் வருத்தம் ஏதாக இருக்கும்? வயதாகிக் கொண்டிருக்கும் மகளுக்கு இன்னும் திருமணமம் நடைபெறும் பேறு கிட்டவில்லையே! என்று அன்னை வருத்தத்தை ராணி தடாதகை பிராட்டி அறிந்தாள். தாய்க்கு ஆறுதல் கூறி உலகனைத்தையும் வென்று, வெற்றிக் கொடி நாட்டப் படை திரட்டிப் புறப்பட்டாள். கயபதி, துரகபதி, நரபதி முதலிய வடநாட்டு அரசர்களை வென்றார். இந்திர உலகிற்குச் சென்றார். இந்திரன் ஓடி ஒளிந்தான். இறுதியாக தடாதகை பிராட்டியர் கயிலை மலைக்கு வந்தார். கயிலை மலையில் போர் முழக்கம் எழுந்தது. பிராட்டியாரின் படையுடன் சிவகணங்கள் மோதின: என்றாலும் தோற்றன. நந்தி தேவர், தான் அனுப்பிய படை தோற்றது கண்டு, சிவபெருமானிடம் ஓடினார். போர்க்களச் செய்தியைக் கூறினார். இறைவன் அறியாத நிகழ்ச்சிகளா? ""யாமே வருவோம்! என்று கூறி சமருக்குப் புறப்பட்டார். சங்கரனார் ""எப்போருக்கும் சளைக்க மாட்டேன்? என்று வீர சக்தி கோலத்தில் நின்றிருந்தார் தடாதகைப் பிராட்டியர்.
எதிரெதிரே நின்றனர் இருவரும், சிவபெருமான் பிராட்டியை நோக்க பிராட்டி ஐயனை நோக்கினார். பூர்வ பந்தம் பார்வையில் கலந்தது. பிராட்டியின் தலையைத் தாழ்த்தியது. அவளது மூன்றாவது தனம் மறைந்தது. சிலிர்த்தது. பிராட்டியர் மனம். அமைச்சர் சுமதி இவற்றைக் கவனித்தார். பழைய நினைவு வந்தது. பிராட்டிக்கும் நினைப்பூட்டினார். ""இந்த அகிலாண்ட ஈஸ்வரனே தங்கள் மணாளன்! என்று உறுதிப்படுத்தினார். சிவபெருமானும் ""அடுத்த சோமவாரத்தில் உன்னை மணக்க வருவேன். இனி, நீ மதுரைக்குச் செல்! என்றார். குறித்த நாளில் குறித்த நேரத்தில் மதுரை மாநகர் தெய்வ லோகமாய் ஜொலிக்க பொற்கலசத்தில் உள்ள புனித நீரினால் திருமால் சிவபெருமானது சிவந்த அடிகளை விளக்கினார். பிரமன் திருமண சடங்குகளை நிகழ்த்தினார். திருமங்கல நாணைப் பூட்டி பிராட்டியின் திருக்கரம் பற்றினார் சிவபெருமான். அன்று முதல் சிவபெருமானே பாண்டியனாக மதுரையில் நல்லாட்சி நடத்தினார்.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »