அவந்திநகரில் வாழ்ந்த அந்தணனின் மனைவி அழகி என்றாலும் ஒழுக்கமற்ற பாவி. அவரது மகனும் எதற்கும் அஞ்சாத கொடியவன். காமுகன். தாயைப்பெண்டாளத் தொடங்கிய சண்டாளன். இச்செயலை அந்தணன் அறிந்தான். தந்தைக்கும் தன் செயல் தெரிந்து விட்டதை அறிந்ததும் மண்வெட்டியால் தந்தையை வெட்டிக்கொன்றான். வழியில், காட்டில் கள்வர்கள் எதிர்பட்டனர். அவனிடம் இருந்த செல்வத்தையும் தாயையும் அபகரித்துக் கொண்டு சென்றனர். பாவத்தின் மொத்த உருவமான அவனை இறந்த அவனது தந்தையின் ஆவி பற்றிக் கொண்டது. நெடுங்காலம் ஆவி பிடித்து பைத்தியமாக அலைந்து இறுதியில் மதுரை வந்து சேர்ந்தான். குற்றத்தையும் குணமாய்க் கொண்டருளும் சோமசுந்தரக் கடவுளும் அங்கயற்கண்ணி அம்மையும் வேடுவத் தம்பதிகளன் வேடத்தில் வந்து அக்கொடியவனை ஆட்கொண்டனர். பாவம் நீங்கிய அவன் பழைய நினைவுகள் வரப்பெற்றான். தன்னை ஆட்கொண்டு மாபாதகம் தீர்த்த இறைவனைத்தொழுது சிவனடியார்கட்குச் சேவை செய்த தன் மீதமுள்ள நாட்களையும் கழித்தான்.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »