கார்த்திகை மகளிர் அறுவர் சிவபெருமானிடம் எட்டுவகைச் சித்திகளான அஷ்டமா சித்தி உபதேசம் பெற்றனர். உபதேசித்த பின் சிவபெருமான், அஷ்டமா சித்திகளுக்குத் தலைவி உமாதேவி. எனவே அவளைத் தொடர்ந்து தியானித்து வரவேண்டும் என்று நிபந்தனை விதித்தார். கார்த்திகை மகளிரோ பார்வதிதேவியைச் சிந்திக்க தவறி சித்திகளை மறந்து விட்டனர். இதை அறிந்த சிவபெருமான், பட்டமங்கைகள் என்னும் ஊரில் ஆலமரத்தடியில் கற்களாகக் கிடப்பீர் என்று கார்த்திகை மகளிர் ஆறுபேரையும் சபித்தார். அவர்கள் அங்கு கற்பாறையாக மாறினர்.
ஆயிரம் ஆண்டுகள் கடந்தன. மதுரையில் சோமசுந்தரக் கடவுளாய் வந்து திருவிளையாடல்கள் புரிந்து அடியார்களைக் காத்து வரும் சிவபெருமான் கார்த்திகை மகளிருக்கும் சாபவிமோசனம் தர கருத்துக்கொண்டார். ஞான ஆசிரியர் வடிவம் தாங்கினார். பட்டமங்கலம் வந்து அக்கற்பாறைகளின் மீது அருள் நோக்கம் சாத்தினார். பாறைகள் சாபம் நீங்கி கார்த்திகை மகளிராயினர். தம்மைத்தொழுத அவர்கட்கு மீண்டும் அஷ்டமாசித்தி உபதேசித்து அருளினார்.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »