மதுரை ஆண்ட சுந்தரேச பாதசேகர பாண்டியனிடம் படை பலம் குறைவு. சோழனின் படை பல ஆயிரம் அதிகம். எனவே அவன் பாண்டியனை வெல்ல பெரும்படையுடன் வந்தான். ஒற்றர் மூலம் செய்தி அறிந்த பாண்டியன் சோமசுந்தரக் கடவுளின் அருட்துணை வேண்டி பிரார்த்தித்தான். ‘வெல்வாய்; நாமே வந்து போர் செய்வோம்!” என்ற அசரீரி எழுந்தது. துணிவுடன் போருக்குச் சென்றான் பாண்டியன்.
பாண்டியன் படைகளின் முன் சிவபெருமான் வேடம் வடிவம் தாங்கி குதிரை மீது வந்தார். இறைவனின் வாள் வீச்சையும், வேல் வீச்சையும் கண்டு அஞ்சி புறமுதுகிட்டு ஓடினான் சோழன். இறைவன் மறைந்தான். சோழனைத் தொடர்ந்து துரத்திச் சென்றான் பாண்டியன். சிறிது தூரம்சென்று திரும்பிப்பார்த்த சோழன் வேடுவன் இல்லை என்று அறிந்தான். துணிந்து பாண்டியனை எதிர்த்துப் போரிட்டான். கடல்போன்ற சோழப்படை முன் நிற்க முடியாது பாண்டியன் படை பின்வாங்கி ஓடியது. இப்போது பாண்டியனைச் சோழன் துரத்தத் தொடங்கினான். பயந்து ஓடிய பாண்டியன் மடு ஒன்றில் விழுந்தான். சோழனும் வீழ்ந்தான். ஆனால் பாண்டியன் இறைவனருளால் உயிர் தப்பி மடுவில் இருந்து வெளியேறினான். சோழன் அங்கேயே இறந்தான்.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »