மதுரை நகரில் வாழ்ந்து வந்த அடியார்க்கு நல்லான் சிறந்த சிவபக்தன். தினமும் சிவனடியார்களுக்கு உணவு இடுவதைத் தம் கடமையாகக் கொண்டவன். அவனது நற்குணத்தை உலகிற்கு உணர்த்தத் திருஉளம் கொண்டார் சோமசுந்தரக்கடவுள். அதன் விளைவாய் நல்லானின் வயல் விளைச்சல் இன்றி சுருங்கியது. அப்படியும் கடன் வாங்கி அடியார்க்கு உணவிட்டான் நல்லான். சில நாட்களில் கடன் தருவாரும் இல்லை என்றாயிற்று. அதனால் வருந்திய நல்லான் தானும் மனைவியுடன் பட்டினி கிடந்தான். கோவிலுக்குச் சென்றான். அடியார்க்கு உணவு இடப்பொருள் இல்லை. கடன் தருவாரும் இல்லை. கடன் தருவாரையாவது காட்டி அருளும், இல்லையேல் நான் உயிரை மாய்த்துக்கொள்வேன் என்றான். அப்போது திருவாக்கு ஒலித்தது. உன் வீட்டில் அரிசிக்கோட்டை நிறைத்துள்ளோம். அள்ள அள்ள குறையாது. எப்போதும் அது நிறைந்தே இருக்கும். அதைக் கொண்டு அடியார்கட்கு அமுதிடுக!’ என்று அசரீரி கேட்டு மகிழ்ந்தான். வீட்டிற்கு வந்தான். கோட்டையாய் குவிந்துள்ள அரிசியைக் கண்டு ஆனந்தித்தான். அடியார்களுக்கு அமுது படைக்கும் திருப்பணி தொடர்ந்து நடந்தது.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »