அவள் பெருஞ்செல்வம் இருந்தும் பெற்றோரை இழந்து அனாதையானாள். மதுரையில் இருந்த மாமன் மணமானவன் என்றாலும் அவனுக்கே தன் மகளைத் தரப்போவதாக் கூறுவார் பெற்றோர். மாமன் வந்து அவளை அழைத்துக் கொண்டு மதுரைக்குப் புறப்பட்டான். வழியில் திருப்புறம்பயம் என்னும் ஊரில் தங்கி இருந்தபோது மாமன் பாம்பு தீண்டி இறந்தான். பாவம் அவள் - பெற்றோரை இழந்து துயரில் கதறிக் கதறி அழுதாள். அவ்வமயம் அவ்வழி வந்த திருஞானசம்பந்தர் தம் அருள் நோக்கால் மாமனுக்கு உயிர்தந்தார். இங்கிருந்த வன்னிமரம், கிணறு, லிங்கம் சாட்சியாக இருவரையும் மணமுடித்து அனுப்பி வைத்தார். என்றாலும் மூத்தாள், இளையாளை ‘நீ அவரது மனைவி அல்ல, ஆசை நாயகி!’ என்றெல்லாம் ஏசிவந்தாள். அதனால் வருந்திய இளையாள் இறைவனிடம் சென்று தன்நிலை கூறி அழுதாள். இறைவன் மனம் இரங்கினார். வடகிழக்கு திசையில் மூன்று சாட்சிகளும் வந்து தோன்றின. மூத்தாளை, அனைவரும் பழித்தனர். இளையாள் தன் குண நலத்தால் அவர்களைத் தடுத்து மூத்தாளுடன் அன்புகாட்டி இனியதாய் இல்லறம் நடத்தி வந்தாள்.
திருவாலவாய்க் காண்டம் முற்றும்.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »