Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) ஆடம்பரம் கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) மகிழ்ச்சி மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » பங்குனி ராசிபலன் (15.3.2019 முதல் 13.4.2019 வரை)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) சொத்து சேரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2018
12:45

மறந்தும் பிறருக்கு தீங்கு எண்ணாத மீன ராசி அன்பர்களே!

புதன் அக்.3 வரையிலும், குருபகவான் அக். 4வரையிலும் சாதகமான பலன் கொடுப்பார்கள். மேலும் சுக்கிரன், செவ்வாய், கேதுவாலும் நன்மை தொடரும். அக்.4ல் குருபகவான் 9-ம் இடமான விருச்சிக ராசிக்கு செல்கிறார். இது மிகச்சிறப்பான இடம். இதுவரை அவரால் ஏற்பட்ட இன்னல்களில் இருந்து விடுபடுவீர்கள். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகமுடன் பணியில் ஈடுபடுவீர்கள்.  நினைத்த செயலை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே கைகூடும்.

குருவின் 9-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக இருப்பதால் பலவழிகளிலும் நன்மை சேரும்.  குடும்பத்தில் சுக்கிரனால் வசதி வாய்ப்பு பெருகும். செவ்வாயால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். புதிய வீடு,மனை, வாகனம் வாங்கும் யோகமுண்டாகும். புதனால் அக்.3 வரை குடும்பத்தில் குழப்பம் நிலவும். கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு உருவாகலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். அதன் பிறகு குடும்பத்தில் அமைதி நிலவும். முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். செப்.25,26ல் பெண்கள்  உதவிகரமாக இருப்பர்.

பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். பணியிடத்தில் திறமை பளிச்சிடும்.புதிய பதவி சிலருக்கு கிடைக்கலாம். எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும். சக பெண் ஊழியர்கள்  ஆதரவுடன் செயல்படுவர். தனியார் துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு புதனால் அக்.3 வரை வேலைப்பளு இருக்கும். வேலையில் கூடுதல் கவனம் தேவை. அதன் பிறகு நிலைமை சீராகும். கடந்த மாதம் விண்ணப்பித்த கடனுதவி தற்போது கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உண்டு.  செப்.17,18,19, அக்.15,16 ஆகிய நாட்கள் அனுகூலமானதாக அமையும்.

தொழில், வியாபாரத்தில் சீரான நிலை அமையும். எதிர்பார்த்த லாபம் கிடைக்க அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். நமக்கு ஏது எதிரி என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள். மறைமுக பகைவர்களால் அவ்வப்போது இடையூறுகள் குறுக்கிடலாம்.  அக்.6,7ல் அதிர்ஷ்டவசமாக வருமானம் கிடைக்கும். கலைஞர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விருது அல்லது பாராட்டு கிடைக்க வாய்ப்புண்டு. பெண் கலைஞர்களால் நன்மை உண்டாகும். தொழில்ரீதியான பயணம் வெற்றி பெறும்.  

அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிறப்பான பலன் காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறலாம். தொண்டர்களின் மத்தியில் மதிப்பு உயரும். மாணவர்கள் அக்.3 வரை  தொய்வான நிலையை சந்திப்பர். அதன் பிறகு கல்வியில் சிறந்து விளங்குவர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவர். ஆசிரியர்களின் ஆலோசனையும், அறிவுரையும் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். விவசாயிகளின் வாழ்வு சிறப்படையும். வருமானத்திற்கு குறை இருக்காது. கீரை வகைகள், காய்கறிகள், பயறு வகைகள், நெல், கோதுமை போன்றவைகளில் நல்ல மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் இந்த மாதத்தை பயன்படுத்திக் கொள்ளவும்.

பெண்கள் குடும்பத்தினரிடம் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. வெளியுலகில் பெருமையாக பேசப்பட்டாலும் குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போவது அவசியம். இல்லையென்றால் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். வேலையில் பொறுமை தேவை. அக்.3க்கு பிறகு குடும்பத்தில் முக்கிய அம்சமாக திகழ்வீர்கள். உங்களால் குடும்பம் சிறப்படையும். குரு சாதகமாக  இருப்பதால் தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் காண்பர்.  சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். அக்.8,9 ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும்.

* நல்ல நாள்: செப்.17, 18, 19, 20, 21, 25, 26, 29, 30, அக்.1, 6, 7, 8, 9, 14, 15, 17
* கவன நாள்: அக்.10, 11 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3, 6 நிறம்: சிவப்பு, வெள்ளை

பரிகாரம்:
●  தேய்பிறை சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
●  தினமும் காலையில் நீராடி சூரிய நமஸ்காரம்
●  திங்கட்கிழமை மாலையில் சிவாலய தரிசனம்

 
மேலும் பங்குனி ராசிபலன் (15.3.2019 முதல் 13.4.2019 வரை) »
temple
நல்லதை மட்டுமே சிந்திக்கும் மேஷ ராசி அன்பர்களே!

சூரியனும், ஏப்.9ல் புதனும் சாதகமற்ற இடத்திற்கு ... மேலும்
 
temple
திட்டமிட்டு செயலாற்றி வரும் ரிஷப ராசி அன்பர்களே!

சூரியன் தொடர்ந்து நற்பலனை வாரி வழங்குவார். ... மேலும்
 
temple
மதிநுட்பத்தால் வெற்றி பெறும் மிதுன ராசி அன்பர்களே!

சூரியன், குருபகவான் நற்பலன் வழங்குவர். ... மேலும்
 
temple
கலையுணர்வுடன் ரசித்து வாழும் கடக ராசி அன்பர்களே!

சனி, கேதுவால் நற்பலன்கள் தொடரும். புதன் ஏப்.8 ... மேலும்
 
temple
சிந்தித்து செயலாற்றி வரும் சிம்ம ராசி அன்பர்களே!

குரு, ராகுவால் இந்த மாதம் நன்மை உண்டாகும். பொன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.