Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2) நன்மை ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) மகிழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) மகிழ்ச்சி

பதிவு செய்த நாள்

19 அக்
2018
03:10

நல்லவர்களின் நட்பை நாடும் மேஷ ராசி அன்பர்களே!

சாதகமற்ற நிலையில் இருந்த புதன், செவ்வாய் இந்த மாதம் நன்மை தரும் இடத்திற்கு மாறுகின்றனர். புதன் அக்.23க்கு பிறகும் செவ்வாய் அக்.27க்கு பிறகும் நற்பலன் கொடுப்பார்கள். செவ்வாயால் அக்.27க்கு பிறகு பொருளாதார வளம் சிறக்கும். பகைவர் தொல்லை மறையும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.

குரு எட்டாம் இடத்தில் இருப்பது கண்டு அஞ்ச வேண்டாம்.  அவரது 7-ம் இடத்துப் பார்வையால் மனதில் துணிச்சல் பிறக்கும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர் சரணடையும் நிலை ஏற்படும்.

மாதத் தொடக்கத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். புதனால் ஏற்பட்ட குடும்ப பிரச்னை, கணவன், -மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு அக்.23க்கு பிறகு மறையும். அதன் பிறகு வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். எடுத்த முயற்சி வெற்றி அடையும்.  சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் உண்டாகும். அக். 20,21, நவ.16 ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும் ஆனால் அக்.31, நவ.1ல் உறவினர் வகையில நெருக்கம் வேண்டாம். அக். 24,25,26ல் சகோதரிகள்  உறுதுணையாக இருப்பர். விருந்து விழா என சென்று வருவீர்கள்.

பணியாளர்கள் அக்.26க்கு பிறகு சிறப்பான முன்னேற்றம் காணலாம். சிலர் பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அதிகாரிகளின் ஆதரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். அக்.18,19, நவ.13,14,15ல் பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். வியாபாரிகள் நல்ல முன்னேற்றத்துடன் இருப்பர். எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும். அக். 27 க்கு பிறகு எதிரிகளால் ஏற்பட்ட முட்டுக்கட்டை அகலும். புதிய வியாபாரம் ஓரளவு அனுகூலத்தை கொடுக்கும். வெளியூர் பயணத்தால் சாதகமான பலன் கிடைக்கப் பெறுவர். நவம்பர் 4,5ல்  எதிர்பாராத வகையில் திடீர் வருமானம் கிடைக்கும்.

அக்.22,23,27,28ல் சந்திரனால் தடைகள் வரலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். சுக்கிரனால் பெண்கள் வகையில் தொல்லைகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் அக்.27க்கு பிறகு முன்னேற்றம் காணலாம். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். நவ.2,3ல் குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் மாத தொடக்கத்தில் சிரத்தை எடுத்து படித்தால் தான் பலன் கிடைக்கும். அக்.23க்கு பிறகு அதிக வளர்ச்சியை எதிர்நோக்கலாம். ஆசிரியர்களின் அறிவுரை உதவிகரமாக இருக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம்.   

விவசாயிகள் நல்ல மகசூல் கிடைக்கப் பெறுவர். கேழ்வரகு, சோளம் போன்ற பயிர்கள் மூலம் நல்ல மகசூல் பெறுவர். அக்.27க்கு பிறகு பால்பண்ணை மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க அனுகூலம் உண்டாகும்.

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். அக்.23க்கு பிறகு தடைபட்ட திருமணம் நடைபெறும். அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். அக்.29,30 ஆகிய நாட்கள் குதூகலமான நாட்களாக அமையும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.  
அக்.23க்கு பிறகு தனியார் துறையில் வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனைப் பெறுவர். நவ.13க்கு பிறகு கணவன்- மனைவி  ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும்.

* நல்ல நாள்:  அக்.18,19,20,21,24,25,26,29,30.நவ.4,5,6,7,8,13,14,15,16
கவன நாள்: நவம்பர் 9,10 சந்திராஷ்டமம்.
* அதிர்ஷ்ட எண்: 1,3
* நிறம்: பச்சை,சிவப்பு  

* பரிகாரம்:
●  தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
●  வெள்ளியன்று அம்மனுக்கு அர்ச்சனை
●  ஞாயிறன்று ஏழைகளுக்கு ஆடை தானம்

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar