பதிவு செய்த நாள்
04
டிச
2018
04:12
கருடன், பட்சிராஜா, இமையில், உவணன், ககபதி, கதேஸ்வரன், கலுழன், சிதமுகன், சிதாநதம், சுபர்ணன், தார்க்கியம், நாகாசனன், நாகாந்தகன், பன்னகவயரி, பன்னகாசனன், புதனுக்கினையோன், புன்னரசு, மாலூர்தி, வயின தேயன், விஷ்ணுரதம் ஆகியவை கருடனின் 20 பெயர்கள் ஆகும். மணவாள மாமுனிகள் வேங்கடவனைத் தரிசிப்பதற்கு முன் ராமானுஜரையும் பின் கருட பகவானையும் சேவித்து பின்னர் ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம் என்பதில் இருந்து கருட பகவானின் மகிமையை நாம் உணரலாம்.