Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ... மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3) ஆடம்பர வசதி பெருகும் மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) தொழிலில் அமோக ஆதாயம்
எழுத்தின் அளவு:
ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) தொழிலில் அமோக ஆதாயம்

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
12:02

ஊக்கத்துடன் முயற்சியில் ஈடுபடும் ரிஷப ராசி அன்பர்களே!

சூரியனும், புதனும் 10-ம் இடத்தில் இணைந்திருப்பதால் எண்ணற்ற நன்மை காண்பீர்கள். சூரியன், சுக்கிரன் பிப்.25ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார்.  குருவாலும் நற்பலன் கிடைக்கும். மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில்  இருந்தாலும் பாதகம் இல்லை. நினைத்தது நிறைவேறும்.  ராகு இப்போது 2-ம் இடமான மிதுனராசியில் இருப்பதால்  குடும்பத்தில்  பிரச்னை, துாரதேச பயணம் உண்டாகும். பொருளாதார இழப்பு ஏற்படும். கேது  இப்போது 8ம் இடத்தில் இருப்பதால் உடல் உபாதை நேரலாம்.  விபத்து பயம், செயல்முடக்கம் வரலாம்.  

குருபகவான் மார்ச் 13ல் அதிசாரம் பெற்று 8-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வை சாதகமாக உள்ளது. பண வரவு கூடும். தேவை பூர்த்தியாகும். பகைவர் சரணடையும் நிலை ஏற்படலாம்.

குடும்பத்தில் புதனால் முன்னேற்றம் உண்டாகும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். வசதிகள் பெருகும். பெண்களால் அனுகூலம் ஏற்படும். பெண்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும்.  பொன், பொருள் சேரும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். குரு மார்ச்13 வரை குடும்பத்தில் குதுாகலத்தைக் கொடுப்பார். சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பிப்.13,14,மார்ச் 12,13,14ல் சகோதர வழியில் பணஉதவி கிடைக்கும். பிப்.17,18ல் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். எனவே அதிக நெருக்கம் வேண்டாம். ஆனால் மார்ச் 8,9ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். சனிபகவானால் அலைச்சல் ஏற்படும். அண்டை வீட்டாரால் பிரச்னை வரலாம்.  

பணியாளர்கள் சீரான நிலையில் இருப்பர். பணியிடத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். சகபெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.


தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு புதிய பதவி தேடி வரும். அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும்.  கோரிக்கைகள்  நிறைவேறும். மார்ச் 5,6,7ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் அதற்குரிய வருமானம் கிடைக்கும்.

வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் பெறும் மாதமாக இது அமையும். தொழிலில் அமோக ஆதாயம் கிடைக்கும்.  கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பிப். 24,25ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். பகைவரை எதிர்த்து வெல்லும் ஆற்றல் பிறக்கும். பிப்.15,16,மார்ச்10,11ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சக பெண்கலைஞர்கள் ஆதரவுடன் செயல்படுவர். உங்களுக்கு வரவேண்டிய புகழ், பாராட்டு கிடைக்கும்.
அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான நிலையில் இருப்பர்.  எதிர்பார்த்த பதவியை பெற முடியாது. ஆனாலும் பணியில் திருப்தி ஏற்படும். பிப்.22,23ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு புதன் சாதகமாக இருப்பதால் முன்னேற்றம் காணலாம். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். குருவால் ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும்.  

விவசாயிகள் பழவகைகள், பயறு வகைகள், மஞ்சள் போன்ற பயிர்கள் மூலம் நல்ல வருமானம் காணலாம். புதிய சொத்து வாங்க யோகமுண்டு. வழக்கு விவகாரங்களில் முடிவு திருப்திகரமாக இருக்கும்.

பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பு கிடைக்கப் பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுக்கிரனால் நல்ல பணப்புழக்கத்தை காண்பீர்கள். பிப்.17,18ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப் பெறலாம். பிப்.26,27ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள்.

* நல்ல நாள்: பிப்.13,14,17,18,24,25,26,27, மார்ச் 5,6,7,8,9,12,13,14
* கவன நாள்: பிப்.28, மார்ச் 1,2 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்:1,3,5
* நிறம்: பச்சை, சிவப்பு  

* பரிகாரம்:
*  நவக்கிரகங்களில் ராகு, கேது அர்ச்சனை
*  ஞாயிறன்று ராகுகாலத்தில் பைரவர் வழிபாடு
*  சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள் விளக்கு

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar