Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ... மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) செவ்வாயால் செல்வாக்கு மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை)
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) ஆபரணச் சேர்க்கை
எழுத்தின் அளவு:
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) ஆபரணச் சேர்க்கை

பதிவு செய்த நாள்

11 ஏப்
2019
04:04

குடும்பத்தினர் மீது அன்புமிக்க கும்ப ராசி அன்பர்களே!

இந்த மாதம் ராசியில் இருக்கும் சுக்கிரன் ஏப்.16ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். 11-ம் இடத்தில் இணைந்திருக்கும் குரு,சனி,கேது தொடர்ந்து நற்பலன் கொடுப்பார்கள். புதன் மே12க்கு பிறகு சாதகமாக நின்று நற்பலன் தருவார். சூரியன் சாதகமான இடத்துக்கு வந்திருப்பதால் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும்.

பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக காணப்படுவதால் திட்டமிட்ட செயல்களை கச்சிதமாக முடிப்பீர்கள். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை உண்டாகும். அபார ஆற்றல் மேம்படும். பொன், பொருள் சேரும். பெண்கள் உறுதுணையாக  இருப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.  ஏப்.16க்கு பிறகு மதிப்பு, மரியாதை கூடும். ஏப். 29,30ல் சகோதரவழியில் ஆதரவு கிடைக்கும். ஏப்.24,25ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.அதே நேரம் மே 6,7ல் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம்.  ஏப்.16,17ல் புத்தாடை, ஆபரணம் வாங்க யோகமுண்டு. மாத முற்பகுதியில் புதன் 2ம் இடத்தில் இருப்பதால் சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம். மே 12க்கு பிறகு கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும்.

பணியாளர்களுக்கு புதனால் ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, வீண் மனக்கவலை முதலியன ஏப்.26க்கு பிறகு மறையும். அரசு பணியாளர்கள் வேலையில் கூடுதல் அக்கறையுடன் இருப்பது அவசியம். ஏப்.22,23 சிறப்பான நாட்களாக அமையும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். மே12க்கு பிறகு புதன் சாதகமான நிலையில் இருப்பதால் பணியிடத்தில் செல்வாக்கு உயரும். பிறரது உதவி இல்லாமல் பணிகளை திறம்பட முடிப்பீர்கள். சக பெண் ஊழியர்கள்  ஆதரவுடன் செயல்படுவர்.

வியாபாரத்தில் சூரியன்,சனி பலத்தால் லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகளால் முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். கடந்த காலத்தில் குறுக்கிட்ட தடைகளில் இருந்து விடுபட்டு வியாபாரத்தில் முழு கவனம் செலுத்தலாம். சிலர் தங்கள் வணிகத்தை விரிவுப்படுத்த வாய்ப்புண்டு. ஏப்.16 க்கு பிறகு வியாபாரிகளுக்கு அரசு வகையில் சலுகை கிடைக்கும்.

விண்ணப்பித்த வங்கி கடன் கிடைக்கும். ஏப்.26க்கு பிறகு அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஏப்.26,27,28, மே1,2,3ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஏப்.14,மே 10,11 ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற்று வளர்ச்சி காண்பர். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். தொழில்ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.  பணத்தை விரயமாக்கியவர்கள் தீயவர்களின் பிடியில் இருந்து மே 6க்கு பிறகு விடுபடுவர். தொண்டர்களின் மத்தியில் செல்வாக்கு பெருகும். மே8,9ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு குரு சாதகமான நிலையில் இருப்பதால் வளர்ச்சி காண்பர். ஆசிரியரின் வழிகாட்டுதல் மூலம் முன்னேற வழி உண்டாகும். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். மே12க்கு பிறகு மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

விவசாயிகள் பணியில் முன்னேற்றம் அடைவர். எந்த பயிர் செய்தாலும் அதில் நல்ல வருமானத்தை காணலாம்.  புதிய சொத்து  வாங்க யோகமுண்டு. மே12க்கு பிறகு கால்நடை வளர்ப்பின் மூலம் முன்னேற்றம் காணலாம்.

பெண்களுக்கு குருபகவான் சாதகமான நிலையில் உள்ளதால் நினைத்த செயலை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு.  
தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும்.   மே 6க்கு பிறகு செவ்வாயால் உடல்நலம் பாதிக்கப்படலாம்.

* நல்ல நாள்: ஏப்.14,15,16,22,23,24,25,29,30, மே 4,5,10,11,12,13,14
* கவன நாள்: ஏப்.17,18 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட  எண்: 1,7,9
* நிறம்: சிவப்பு, மஞ்சள்

* பரிகாரம்:
*   செவ்வாயன்று முருகனுக்கு அர்ச்சனை
*   ஞாயிறன்று நீராடியதும் சூரிய தரிசனம்
*   பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் வழிபாடு

 
மேலும் பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினி: வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்ந்து, அனைத்தையும் எதிர்கொண்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் முதன்மையானவரான உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்சிந்தித்து செயல்படுவதுடன் மற்றவர்களை வழிநடத்தும் திறமையும் கொண்ட உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மகம்விடா முயற்சியுடன் தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டுவரும் உங்களுக்கும் பிறக்கும் பங்குனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar