Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) சுக்கிரனால் பதவி உயர்வு மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) செவ்வாயால் செல்வாக்கு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) செவ்வாயால் செல்வாக்கு

பதிவு செய்த நாள்

11 ஏப்
2019
04:04

வெள்ளை மனம் படைத்த  மீன ராசி அன்பர்களே!

பெரும்பாலான கிரகங்கள் சாதகமான நிலையில் இல்லை. அதற்காக மனம் உடைந்து போய் விட வேண்டாம். சுக்கிரன் ஏப்.16ல் இடம்மாறி நற்பலனை தருவார். செவ்வாய் மே 6 வரை சாதகமாக இருப்பதால் செல்வாக்கு உயரும்.  மனதில் பக்தி எண்ணம் மேம்படும். எடுத்த செயல் அனைத்திலும் விடாமுயற்சியால் வெற்றி காணலாம். பொருளாதார வளம் ஓரளவு மேம்படும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். குருபகவானின் 5-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால் மனதில் துணிச்சல் பிறக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கலாம்.

தெய்வ அனுகூலத்தால் மனதில் குதூகலம் உண்டாகும். சுக்கிரனால் ஏப்.16க்கு பிறகு தேவையான சகல வசதிகளும் கிடைக்கும். பெண்களால் நன்மை கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். புதனால் ஏற்பட்ட உறவினர் கருத்துவேறுபாடு, வீண்விரயம், குடும்ப பிரச்னை போன்றவை ஏப்.26க்கு பிறகு  மறையும். அதுவரை  கவனம் தேவை. ஏப். 26,27,28ல் உறவினர் வருகையால் நன்மை ஏற்படும்.

பணியாளர்கள் சீரான நிலையில் காணப்படுவர். சுக்கிரனால் ஏப்.16க்கு பிறகு பதவி உயர்வு கிடைக்கும். போலீஸ் மற்றும் ராணுவத்தில் பணிபுரிபவர்கள் வளர்ச்சி காண்பர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை  மே 6க்குள் கேட்பது நல்லது. ஏப்.24,25 சிறப்பான நாட்களாக அமையும். உங்கள் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். தனியார் துறையில் வேலைபார்ப்பவர்கள் பணிச்சுமையால் அவதிப்பட வேண்டியதிருக்கும்.  இடமாற்ற பீதி ஏப்.26க்கு பிறகு மறையும். மே12க்கு பிறகு அரசு வேலையில் இருப்பவர்கள் கூடுதல் அக்கறையுடன் பணியில் ஈடுபடவும். எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறாமல் போகலாம்.

தொழில், வியாபாரத்தில் செவ்வாயின் அனுகூலத்தால் பொருளாதார வளம் மேம்படும். ஆன்மிக சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தைப் பெறுவர்.  பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகத்தில் நல்ல ஆதாயம் கிடைக்கும். ஏப்.29,30 மே4,5ல் சந்திரனால்  தடைகள் வரலாம். ஏப்.15,16 மே12,13,14ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். சனிபகவானால் எதிரிகளின் இடையூறு தலைதூக்கலாம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். ஆனால் குருவின் பார்வையால் பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். மே12க்குப் பிறகு அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை.

கலைஞர்களுக்கு சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அதிக வருமானம் இருக்கும். சமூகநல சேவகர்கள் மக்கள் மத்தியில் நற்புகழ் பெறுவர். அரசியல்வாதிகளுக்கு  எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.

மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை காட்ட வேண்டியதிருக்கும்.  குருவின் 5-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால் ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும்.

விவசாயிகள்  கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற பயிர்கள் மூலம் அதிக மகசூல் பெறுவர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் மே 6க்குள் கைகூடும்.

பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்ல வாய்ப்புண்டு. குருவின் 5-ம் இடத்துப்பார்வை சிறப்பாக  உள்ளதால் தேவைகள் பூர்த்தியாகும்.  தனியார் துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு  பொறுமை தேவை. மே6,7ல் ஆடை, அணிகலன்  சேரும்.

* நல்ல நாள்: ஏப்.15,16,17,18,24,25,26,27,28,
மே1,2,3,6,7,12,13,14
* கவன நாள்: ஏப்.19,20,21 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,8
* நிறம்: சிவப்பு, வெள்ளை

* பரிகாரம்:
*   திங்களன்று சிவனுக்கு வில்வ மாலை
*   சனிக்கிழமையில் சாஸ்தா வழிபாடு
*   பவுர்ணமியன்று அம்மனுக்கு நெய்தீபம்

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் கவனமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar