Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

இன்றைய செய்திகள் :
கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) அமோக லாபம் கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) பதவி உயர்வு விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » புரட்டாசி ராசிபலன் (17.9.2021 முதல் 17.10.2021 வரை)
துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) போட்டியில் வெற்றி
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2019
13:26

சூரியன், செவ்வாய், குரு, சனி, கேது மாதம் முழுவதும் நன்மை தருவர். புதனால் செப்.7 வரையும், சுக்கிரனால் செப்.10 வரையும்  நற்பலன்கள் கிடைக்கும்.  இதனால் இம்மாதம் சிறப்பான மாதமாக அமையும். தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். பொருளாதார வளம் குறையாது.  முயற்சியில் இருந்த தடைகள் விலகும். மதிப்பு மரியாதை உயரும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும்.

சனிபகவான் காரிய அனுகூலம், பொருளாதார வளம், குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழில் விருத்தியை தந்து கொண்டு இருக்கிறார். குருபகவான் 2-ம் இடமான துலாம் ராசியில் இருப்பதும் சிறப்பான அம்சம். மனதில் துணிச்சல் பிறக்கும். வருமானம் அதிகரிக்கும்.

குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். சுக்கிரனால் பணவரவு அதிகரிக்கும். சொந்த பந்தங்களின் வருகை இருக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். செப்.3,4 ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரிகளால் பண உதவி கிடைக்கும். ஆக.30,31ல் உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். அதே நேரம் செப். 10,11ல் அவர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். வேலைப்பளு குறையும். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு தடை ஏதும் இல்லை. அரசு ஊழியர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும்.  தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம்.  சக பெண் ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். செப்.7 க்கு பிறகு வீண் அலைச்சல் இருக்கும்.

வியாபாரிகள் தொழிலில் முன்னேற்றம் காண்பர். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சி வெற்றி பெறும். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். பங்கு வர்த்தகம்  நல்ல லாபத்தை தரும். கோயில், புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும்.  ராகுவால் சிலர் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகலாம். செப்.1,2,5,6ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஆக.18,19,20, செப்.15,16ல் எதிர்பாராமல் பணம் கிடைக்கும். பகைவரை எதிர்த்து வெல்லும் ஆற்றல் இருக்கும்.

கலைஞர்கள் புகழ், பாராட்டு கிடைக்கப் பெறுவர். சகபெண் கலைஞர்கள் உறுதுணையாக இருப்பார். செப்.10க்கு பிறகு  புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள்  சிறப்பான வளர்ச்சி காண்பர்.  புதிய பதவியும் தேடி வரும்.

மாணவர்களுக்கு கடந்த காலத்தில் இருந்த தொய்வு நிலை மறையும். புதன் சாதகமாக இருப்பதால் நல்ல முன்னேற்றம் காணலாம். போட்டி, பந்தயங்களில் பங்கேற்று வெற்றி காண்பர். செப்.7 க்கு பிறகு  விடாமுயற்சியுடன் படிக்க வேண்டியதிருக்கும்.  இருப்பினும் குரு பலமாக இருப்பதால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும்.

விவசாயிகளுக்கு  வருமானத் திற்கு குறைவிருக்காது. பாசிப்பயறு, நெல், கோதுமை, சோளம், மஞ்சள், தக்காளி, பழ வகைகள் மூலம் வருமானம் உயரும். கால்நடை வளர்ப்பின் மூலம் கூடுதல் லாபத்தை எதிர்பார்க்கலாம். புதிய சொத்து வாங்க யோகமுண்டு.

பெண்கள் சீரான வளர்ச்சி அடைவர். உங்களால் குடும்பம் சிறக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள்.  பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும்.  வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர்.

சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் முன்னேற்றம் காண்பர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.  தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.

உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.  செப். 7,8,9 மகிழ்ச்சியான நாட்களாக அமையும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். செப்.7க்கு பிறகு தனியார் துறையில் பணியாற்றுபவர்கள் கடுமையாக உழைக்க வேண்டிய திருக்கும். உடல்நிலை சீராக இருக்கும்.

* நல்ல நாள்: ஆக.18,19, 20,21,22,28,29,30,31 செப்.1,2,5,6,12,13,14,15
* கவன நாள்:  ஆக.23,24,25 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,9
* நிறம்: பச்சை, மஞ்சள்

பரிகாரம்:
●  வெள்ளிக்கிழமை நாகதேவதை தரிசனம்
●  பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் தரிசனம்
●  புதனன்று மகாவிஷ்ணுவுக்கு நெய் தீபம்

 
மேலும் புரட்டாசி ராசிபலன் (17.9.2021 முதல் 17.10.2021 வரை) »
temple
அசுவினி:அடுத்தவர் யாரும் குறை கூறக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் அசுவினி நட்சத்திர அன்பர்களே ... மேலும்
 
temple
கார்த்திகை - 2, 3, 4:எடுத்த கொள்கையில் மாறாமல் இருக்கும் கார்த்திகை நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் ... மேலும்
 
temple
மிருகசீரிஷம் - 3, 4:முயற்சிகளில் தொய்வில்லாமல் உழைக்கும் மிருகசீரிட நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் ... மேலும்
 
temple
புனர்பூசம் - 4:சொல்லாற்றலுடன் செயலாற்றலும் கொண்டு செயல்படும் புனர்பூச நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் ... மேலும்
 
temple
மகம்:எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் மக நட்சத்திர அன்பர்களே நீங்கள் சூழ்நிலைக் கேற்றவாறு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.