Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ... துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) போட்டியில் வெற்றி துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) அமோக லாபம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) அமோக லாபம்

பதிவு செய்த நாள்

17 ஆக
2019
01:08

புதன் ஆக.21 வரை சாதகமான பலனைக் கொடுப்பார். சுக்கிரன் செப்.10க்கு பிறகு நற்பலன் கொடுப்பார். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எந்த ஒரு செயலையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. பெண்கள் உறுதுணையாக செயல்படுவர். குரு பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. பொதுவாக குரு 3-ம் இடத்தில் இருக்கும் போது முயற்சியில் தடை ஏற்படும்.

எதிர்பார்த்த பதவி உயர்வு  கிடைக்காது. உங்கள் நிலையில் தடுமாற்றம் ஏற்படும். ஆனால் குருவின் பார்வை அனைத்தும் சாதகமாக உள்ளன. குருபார்க்க கோடி நன்மை உண்டு. எந்த இடையூறையும் அவரது பார்வை உடைத்து எறியும். குடும்பத்தில் மாதத் தொடக்கத்தில் புதனால் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் மேம்படும்.  எடுத்த முயற்சி வெற்றி பெறும். செப்.10க்கு பிறகு ஆடம்பர வசதிகள் பெருகும். பெண்களால் சுகம் கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். செப்.1,2 ல் சகோதரிகள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆக.28,29ல் உறவினர்களால் நன்மை கிடைக்கும். அதே நேரம் செப்.7,8,9ல் அவர்கள் வகையில் சற்று  ஒதுங்கி இருக்கவும். செப்.7க்கு பிறகு கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்காது. சிறு பிரச்னைகள் வந்து மறையும். சூரியனால் விரயம் ஏற்படும்.

பணியாளர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலர் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆக.21க்கு பிறகு வேலைப்பளு அதிகரிக்கும். கோரிக்கைகள் அதிக முயற்சியின் பேரில் நிறைவேறும். இருப்பினும் ஆக.26,27ல் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். செப்.7க்கு பிறகு இடமாற்றம் ஏற்படலாம். செப்.10க்கு பிறகு சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.  

வியாபாரிகளுக்கு புதனால் மாத தொடக்கத்தில் பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் அமோக லாபம் கிடைக்கும். ஆக.31க்கு பிறகு எதிரிகளின் தொல்லை அவ்வப்போது தலைதூக்கும். வாடிக்கையாளரை அதிக முயற்சியால் தக்கவைக்க வேண்டியிருக்கும். செப்.10க்கு பிறகு  சுக்கிரனால் தொழில் வளர்ச்சி பெறும். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் வளர்ச்சி பெறும். ஆக.30,31, செப்.3,4 ல் சந்திரனால் தடைகள் வரலாம். செப்.12,13,14ல் எதிர்பாராத வகையில் பணம் வரும்.

கலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் செப்.10க்கு பிறகு மறையும். அதன் பிறகு சிறப்பான வளர்ச்சி ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி இருக்கும். அரசியல்வாதிகள்,  சமூகநல சேவகர்கள் சிரத்தை எடுத்து முன்னேற வேண்டியதிருக்கும்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம். ஆக.21க்கு பிறகு சிரத்தை எடுத்து படிப்பது அவசியம். குருவின் பார்வையால் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  

விவசாயிகள் பழ வகைகள்,  கேழ்வரகு, சோளம் போன்ற பயிர்கள் மூலம் அதிக வருமானம் காண்பர். கால்நடைகளின் மூலம் அதிக வருமானம் கிடைக்கும். பெண்களுக்கு குருவின் பார்வையால் தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. தேவைகள் பூர்த்தியாகும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.  புதனால் கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். புதிய பதவி தேடி வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவும், அனுசரணையும் கிடைக்கும். சுயதொழிலில் ஈடுபடும் பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைவர். செப்.5,6 நாட்கள் சிறப்பானதாக அமையும். புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டு.  

* நல்ல நாள்: ஆக.18,19,20, 26,27,28,29, செப்.1,2, 5,6,12,13,14,15,16
* கவன நாள்: ஆக.21,22 செப்.17
* அதிர்ஷ்ட எண்: 1,5
* நிறம்: பச்சை, வெள்ளை

பரிகாரம்:
●  செவ்வாய்கிழமை முருகன் கோயில் வழிபாடு
●  தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் தரிசனம்
●  வெள்ளிக்கிழமை துர்கைக்கு எலுமிச்சை தீபம்

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar