Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) ஆடம்பர வசதி ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ஆன்மிக சுற்றுலா கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசிபலன் (18.10.2019 முதல் 16.11.2019 வரை)
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) பணப்புழக்கம் கூடும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2019
15:11

புதன் செப்.25 வரையும்,  செவ்வாய் செப்.26 வரையும் நற்பலன் தருவர். அத்துடன் சுக்கிரனாலும் நற்பலன்கள் தொடரும். எடுத்த செயலை வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். தெய்வ அனுகூலம் கிடைக்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கலாம்.

குடும்பத்தில் மதிப்பு, மரியாதை உயரும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். நண்பர்களால் உதவி கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் கைகூடும்.  கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை நிலவும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  செப்.25 க்கு பிறகு புதன் சாதகமற்ற  இடத்தில் இருப்பதால்  குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு மறையும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். செப். 22,23 ல் பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். செப்.18,19, அக்.15,16 ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் செப்.28,29ல் உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. அக்.5 க்கு பிறகு பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். மனதில் பக்தி எண்ணம் மேலோங்கும்.

பணியாளர்களுக்கு சக ஊழியர்கள் மத்தியில்  விரோதம் உருவாக வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். இருப்பினும் புதன் சாதகமான நிலையில் இருப்பதால் வேலைப்பளு குறையும். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சிலர் பதவி உயர்வு காண்பர்.  பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை செப். 26 க்குள் கேட்டு பெறவும். அதன் பிறகு வேலை நிமித்தமாக சிலர்  குடும்பத்தை விட்டு பிரியும் நிலை ஏற்படலாம். அக்.12,13,14ல் சிறப்பான பலனைக் காணலாம்.

வியாபாரிகள் தொழிலில் நல்ல வளர்ச்சி காண்பர்.  ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள் வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் வருமானத்தை எதிர்பார்க்கலாம். பெண்கள் வகையில் சற்று கவனமாக இருக்கவும். செப்.26க்கு பிறகு  வீண்அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். செப்.20,21,24,25, அக்.17 ல் சந்திரனால் விரயம் ஆகலாம்.  முயற்சிகளில் தடைகள் குறுக்கிடலாம். அக்.3,4ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். அக்.5 க்கு பிறகு குடும்பத்திலுள்ள பெரியவர்களிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படையுங்கள்.

கலைஞர்களுக்கு  புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அக்.5க்கு பிறகு சக கலைஞர்கள் உதவிகரமாக இருப்பர். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிறப்பான பலனை காண்பர். செப். 26க்கு பிறகு மனதில் சோர்வு ஏற்படலாம். ஆனால் வருமானத்திற்கு குறைவு ஏற்படாது.

மாணவர்களுக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல் கிடைக்கும். கல்வியில் முன்னேற்ற பாதையில் செல்வர். புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். செப்.25க்கு பிறகு சிரத்தை எடுத்து படிப்பது நல்லது.  சக மாணவர்களிடம் விழிப்புடன் பழகவும்.  

விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறைவிருக்காது. பயறு வகைகள், கேழ்வரகு, கரும்பு, பனைத்தொழில் போன்றவற்றில் அதிக மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். கால்நடை வளர்ப்பிலும் போதிய வருமானம் கிடைக்கும்.    வழக்கு, விவகாரங்களில் சுமாரான முடிவு கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் காண்பர். தோழிகள் உதவிகரமாக செயல்படுவர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் அடைவர். சிலருக்கு புதிய பதவி தேடி வரும்.  மேல் அதிகாரிகளின் ஆதரவும் சகஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

செப். 26,27ல் புத்தாடை, அணிகலன் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப் பெறலாம். அக்.5,6ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். செப்.26 க்கு பிறகு வேலையில் பொறுமையும் நிதானமும் தேவைப்படும். பொறுப்பை தட்டிகழிக்காமல் உடனுக்குடன் முடிக்கவும். சிலர் வேலை விஷயமாக வெளியூரில் தங்க நேரிடும். உடல்நிலை சுமாராக இருக்கும். கேதுவால் அலைச்சல் ஏற்படலாம். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.

* நல்ல நாள்: செப்.18,19, 22,23,26,27, அக்.3,4,5, 6,12,13,14,15,16
* கவன நாள்: அக்.7,8,9 சந்திராஷ்டமம்  
* அதிர்ஷ்ட எண்: 4,8
* நிறம்: சிவப்பு, வெள்ளை

பரிகாரம்
●  வெள்ளியன்று ராகு கால துர்கை வழிபாடு
●  தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
●  ஏகாதசியன்று மகாவிஷ்ணுவுக்கு அர்ச்சனை

 
மேலும் ஐப்பசி ராசிபலன் (18.10.2019 முதல் 16.11.2019 வரை) »
temple
இந்த மாதம் சூரியன் சாதகமற்ற நிலைக்குச் சென்றாலும் கவலை வேண்டாம். அக்.28 ல் குருவும், அக்.29ல் ... மேலும்
 
temple
சூரியன், புதன் மாதம் முழுவதும் நற்பலன் அளிப்பர். குரு அக்.28 வரையிலும், செவ்வாய் நவ.12க்கு பிறகும் நற்பலன் ... மேலும்
 
temple
சுக்கிரன் அக்.29 வரையும், அதன் பின் குருவும் நற்பலன் கொடுப்பர். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற ... மேலும்
 
temple
குரு அக்.28 வரையிலும், செவ்வாய் நவ.12 வரையிலும் நன்மை தருவர். புதன், சுக்கிரன், கேது, சனியால் மாதம் ... மேலும்
 
temple
சுக்கிரன், சூரியன், ராகு ஆகியோர் சாதகமாக நின்று நன்மைகளை தருவார்கள். மேலும் அக்.28க்கு பிறகு குருவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.