பதிவு செய்த நாள்
17
செப்
2019
03:09
● தஞ்சாவூர் மாவட்டம் திருக்கண்டியூரில் மும்மூர்த்திகளுக்கும் கோயில் இருக்கின்றன. சிவபெருமான் வீரட்டேஸ்வரராகவும், திருமால் ஹரசாப விமோசனப் பெருமாளாகவும், பிரம்மா தன் தேவி சரஸ்வதியோடும் இருக்கின்றனர்.
● திருச்சி உத்தமர் கோவிலில் திருமால் புருேஷாத்தமராக சயனக் கோலத்திலும், சிவபெருமான் பிட்சாடனராகவும், பிரம்மா தன் மனைவி சரஸ்வதியோடும் இருக்கின்றனர்.
● ஈரோடு அருகிலுள்ள கொடுமுடியில் சிவன் லிங்க வடிவத்தில் மூலவராகவும், திருமால் ரங்கநாதராகவும், பிரம்மா வன்னி மரத்தடியிலும் காட்சி தருகின்றனர்.
● கோவை அருகிலுள்ள திருமூர்த்தி அமண லிங்கேஸ்வரர் கோயிலில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒரே லிங்க ரூபமாக உள்ளனர்.
● கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் மூலட்டானேஸ்வரராக சிவனும், பள்ளி கொண்ட நிலையில் கோவிந்தராஜ பெருமாளும், பிரம்மா தனி சன்னதியிலும் உள்ளனர்.
● கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் ( தாணு – சிவன், மால் – திருமால், அயன் – பிரம்மா) இணைந்த வடிவத்தை கொன்றை மரத்தடியில் தரிசிக்கலாம்.