திருப்பதி மலையில் ஏழுமலையானுக்கு தங்க இடம் கொடுத்தவர் ஆதிவராகப் பெருமாள். இவருக்கு ‘ஞானபிரான்’ என்றும் பெயருண்டு. மலை மீதுள்ள கோயிலை ஒட்டிய சுவாமி புஷ்கரணி குளக்கரையில் கோயில் கொண்டிருக்கிறார். கல்வி, பேச்சாற்றல், வியாபார வளர்ச்சி பெற இவரை வழிபடுவர். தினமும் ஏழுமலையானுக்கு நைவேத்யம் படைக்கும் முன் வராகருக்கு முதலில் நைவேத்யம் படைக்கின்றனர். அதே போல பக்தர்களும் வராகப்பெருமாளை தரிசித்த பின்னரே ஏழுமலையானை தரிசிக்கின்றனர்.