Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: மாசி மாத ராசி பலன் மிதுனம் : மாசி மாத ராசி பலன் மிதுனம் : மாசி மாத ராசி பலன்
முதல் பக்கம் » ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை)
ரிஷபம் : மாசி மாத ராசி பலன்
எழுத்தின் அளவு:
ரிஷபம் : மாசி மாத ராசி பலன்

பதிவு செய்த நாள்

13 பிப்
2021
08:02

கார்த்திகை 2, 3, 4ம் பாதம் :    இந்த மாதத்திய கிரக நிலை சிறிது சிரமத்தினைத் தரும் வகையில் அமையும். எதிர்பாராத திடீர் செலவுகளால் சற்று தடுமாறும் சூழ்நிலை உருவாகும். அநாவசிய செலவுகளைத் தவிர்ப்பதில் அதிக கவனம் செலுத்தவேண்டிய நேரம் இது. பொருள்வரவு சீராக இருந்து வரும். அடுத்தவர்களின் குடும்ப பிரச்னைக்கு சமரசம் காண வேண்டிய சூழ்நிலை உருவாகும். தொலைதொடர்பு சாதனங்களால் செலவுகளை சந்திக்க நேரிடும். இந்த மாதத்தில் அடிக்கடி எதிர்பாராத சிறிது தூர பிரயாணங்கள் செய்ய நேரிடும். வண்டி, வாகனங்கள், பிரயாணங்கள் நன்மை தரும் வகையில் அமையும். மாணவர்கள் நண்பர்களின் துணையோடு கல்வி நிலையில் முன்னேற்றம் காண்பார்கள். பிள்ளைகளின் செயல்கள் பெருமை கொள்ளத்தக்க வகையில் அமையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மனதை அதிகமாக ஆக்கிரமிப்பு செய்யும். புதிய நண்பர்கள் சேருவார்கள். மாற்று மொழி பேசும் பெண்களால் நன்மை உண்டாகும். பொதுநலக் காரியங்களில் முன்நின்று செயல்பட வேண்டி இருக்கும். உணவு வகைகளில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. முழங்கால் வலி, மூட்டு வலி போன்றவற்றால் அவதியுற நேரிடும். வாழ்க்கைத்துணையின் வார்த்தைகள் உங்களுக்கு புதிய உத்வேகத்தினைத் தரும் வகையில் அமையும். பிரயாணங்களின் போது ஆதாயம் தரும் புதிய நட்பு உருவாகும் வாய்ப்பு உள்ளது. பெற்றோரின் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் ரீதியான உங்களது எண்ணங்களுக்கு செயல் வடிவம் தரும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குரு பகவான் வியாபாரிகளுக்கு சீரான தன லாபத்தினைத் தருவார். தேவையற்ற அநாவசியமான கவலைகளினால் சிறிது நிம்மதியை இழக்கும் மாதம் இது.  

பரிகாரம் : அபிராமி அந்தாதி
சந்திராஷ்டமம் : மார்ச் 6, 7

ரோகிணி :இந்த மாதத்தில் திடீர், திடீரென்று எதிர்பாராத செலவுகளுக்கு ஆளாவீர்கள். இக்கட்டான சூழ்நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் திடீரென தோன்றும் பிரச்னைகளிலிருந்து விடுபட அதிக அளவில் செலவழிக்க வேண்டி வரும். குடும்பத்தின் பொருளாதார நிலையில் மாற்றம் தோன்றும். சேமிப்புகள் கரையத் தொடங்குமோ என மன வருத்தம் கொள்வீர்கள். செயல்களில் விவேகம் தேவை. உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள். வண்டி, வாகனங்கள், பிரயாணங்களில் குறிப்பிடத்தகுந்த ஆதாயத்தினைக் காண்பீர்கள். முன்பின் தெரியாத நபர்களிடம் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது. தாயாரின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. அதிகளவில் செலவுகள் தொடர்வதால் சிந்தனையில் லேசான குழப்பத்திற்கு இடமளிப்பீர்கள். உடல்நிலை சீராக இருந்து வரும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு மிகுந்த பக்கபலமாக இருந்து செயல்படுவார். அடுத்தவர்களை நம்பி எந்த வித ஜாமீன் நடவடிக்கைகளிலும், கொடுக்கல், வாங்கல்களிலும் கண்டிப்பாக ஈடுபடக்கூடாது. பிள்ளைகளின் நல வாழ்விற்காக அதிகம் அலைய நேரிடும். தொழில் நிலை சிறப்பாக இருந்து வரும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்கள் பணிகளை விரைவாக செய்து முடித்து நற்பெயரோடு நல்ல கவுரவத்தினையும் அடைவார்கள். வியாபாரிகள் நேர்மையான முறையில் தனலாபத்தினை அடைவார்கள். தொழில்முறை பிரயாணங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுத் தரும். சுயதொழில் செய்வோருக்கு தொழில்ரீதியாக கூடுதலான அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் உழைப்பிற்கேற்ற ஊதியம் நிச்சயமாகக் கிடைக்கும். நற்பலனைத் தரும் மாதம் இது.

பரிகாரம் : ஸ்ரீ மஹிஷாசுரமர்த்தினி
சந்திராஷ்டமம் : மார்ச் 7

மிருகசீரிடம் 1, 2ம் பாதம் : இந்த மாதத்திய கிரக நிலை நினைத்த காரியங்களை எளிதில் நடத்தி முடிக்கும் திறனை அளிக்கும். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல, நீங்கள் சந்திக்க நினைக்கும் நபர் உங்களை நாடி வந்து உதவி செய்வார். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வரும். பேசும் வார்த்தைகளில் வெளிப்படும் விவேகமான கருத்துக்கள் அடுத்தவர்கள் மத்தியில் உங்கள் நன்மதிப்பினை உயரச் செய்யும். உழைப்பிற்கேற்ற ஊதியத்தினை உடனுக்குடன் கண்டு வருவீர்கள். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். நெருங்கிய நபர் ஒருவர் செய்நன்றி மறந்து செயல்படுவதைக் கண்டு மனம் வருந்த நேரிடும். உறவினர்களுடன் பண விவகாரங்களில் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. மனதில் தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. முக்கியமான காரியங்களில் இடைத்தரகர்களை தவிர்த்து நேரடியாக செயல்படுவது அவசியம். மாணவர்களின் கல்வித்தரம் உயரும். வண்டி, வாகனங்களால் ஒரு சில செலவுகளை சந்திக்க நேரிடும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கியமான திட்டங்களை செயல்படுத்த கால நேரம் சாதகமாக அமையும். உடலில் அவ்வப்போது தலைதூக்கும் சோம்பல்தன்மையால் ஒரு சில இழப்புகளை சந்திக்க நேரலாம். கடன்பிரச்னைகள் கட்டுக்குள் இருந்து வரும். முன்பின் தெரியாத பெண்களிடம் கூடுதல் கவனத்துடன் இருந்துகொள்வது நல்லது. நண்பர்களின் வழியில் கூடுதல் செலவுகளை சந்திக்க நேரலாம். மாதத்தின் முற்பாதியில் பெற்றோரின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தொழில்முறையில் சிறப்பான முன்னேற்றத்தினைக் காணும் நேரம் இது. அலுவல் பணியில் தனித்திறமையை வெளிப்படுத்தி உங்கள் கவுரவத்தை உயர்த்திக் கொள்வீர்கள். உயரதிகாரிகளிடம் நன்மதிப்பினைப் பெறுவீர்கள். சுயதொழில் செய்வோர் சிறப்பான தனலாபம் காண்பார்கள். நினைத்தது நடக்கும் மாதம் இது.

பரிகாரம் : மஹாலக்ஷ்மி
சந்திராஷ்டமம் : மார்ச் 8

 
மேலும் ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »
temple news
அசுவினி; வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள உங்களுக்கு ஆனி மாதம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்தெளிவான சிந்தனையும், உறுதியான எண்ணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தைரிய ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்வாழ்வின் உண்மையான அர்த்தம் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட ... மேலும்
 
temple news
மகம்வாழ்வில்  நெருக்கடி வந்தாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar