Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ரிஷபம் : ஆங்கில புத்தாண்டு ராசி பலன் ... கடகம் : ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2023 கடகம் : ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2023
முதல் பக்கம் » 2026 வருட ராசி பலன்
மிதுனம் : ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2023
எழுத்தின் அளவு:
மிதுனம் : ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2023

பதிவு செய்த நாள்

29 டிச
2022
05:12

மிருகசீரிடம் - 3, 4: புதிய முயற்சிகளில் திட்டமிட்டு வெற்றி பெறும் உங்களுக்கு இந்த ஆண்டு குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். சுபச்செலவு உண்டாகும். பல வகையிலும் முயன்று வருமானத்தை ஈட்டுவீர்கள். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். சிலர் சொந்த வீடு வாங்குவர். உங்கள் பொறுப்புகளை எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் முடித்து விடுவீர்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு கூடும். பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்களைத் தேடி சுபச்செய்திகள் வந்து சேரும். அரசு மூலம் ஏற்பட்ட  கெடுபிடிகள் குறையும். சமுதாயத்தில் உயர்ந்தோரை நாடிச் சென்று அவர்களின் ஆலோசனைகளால் பயனடைவீர்கள். கடினமான செயல்களைச் செய்து முடிக்க உடல்நிலை ஒத்துழைக்கும்.  சொத்துக்களை விற்று தொடர் வருமானம் தரும் முதலீடுகளைச் செய்வீர்கள். புதியவர்கள் நட்புக் கொள்ள அழைப்பார்கள். அதேநேரம், உங்கள் செயல்களை ஆரவாரம் இன்றி செய்யுங்கள். ரகசியங்கள் வெளியில் தெரியாமல் கவனமாக இருக்கவும். முரண்டு பிடிக்கும் நண்பர்களிடமிருந்து விலகி விடவும். இதனால் புதுப்பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். பிள்ளைகளைத் தட்டிக் கொடுத்துச் சென்று அவர்களால் எந்த பிரச்னையும் நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
பணியாளர்களுக்கு விரும்பும் இடமாற்றம் கிடைக்கும். ஆனால் மேலிடத்துடன் இணக்கமாகச் செல்வது நல்லது. சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பர். உங்கள் மீது பிறர் வீண் குற்றச்சாட்டு சுமத்த நேரலாம். கவனம். குடும்பத்தை விட்டு சிறிது காலம் பிரியும் சூழல் ஏற்படலாம். பணிகளின் நிமித்தமாக அடிக்கடி பிரயாணம்
ஏற்படும். நீங்கள் செய்யும் பணிகளின் மீது அதிக கவனம் செலுத்துவது நல்லது. உங்களிடம் இருக்கும் ஆவணங்களை சரியான முறையில் பாதுகாப்பது அவசியம். மறைமுக எதிர்ப்புகளைச் சமாளிக்க எந்த சூழ்நிலையிலும் நியாயத்தின் பக்கம் நிற்பது நன்மை தரும்.
தொழில் துறையினருக்கு போட்டியாளர்கள் மூலம் மன உளைச்சல் ஏற்படலாம். உங்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களிடம் கனிவான உறவை கடைபிடிப்பது நல்லது. அதிக வருமானம் பெற அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுப்பது அவசியம். உப தொழிலை ஆரம்பிக்க வாய்ப்பு கிடைக்கும். எந்த யோசனையையும் சரியான ஆலோசகர்களிடம் கலந்துரையாடி முடிவெடுங்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட கஷ்டம் அனைத்தும் நீங்கும். கூட்டுத்தொழில் ஆரம்பிக்கும் முன் ஆவணங்களை சரியாக பார்த்து முடிவெடுங்கள். முடிந்த வரை  பொறுமையைக் கடைபிடிப்பது நன்மை தரும். கடன்கள் அடைபடும். பணம் புழங்கும் இடங்களில் நம்பிக்கையானவர்களை நியமிப்பது நல்லது.
கலைத்துறையினர் சிறு வாய்ப்பைக் கூட வீணாக்காமல் பயன்படுத்துவது நல்லது. உங்கள் திறமைகளை வெளிக்கொண்டு சிறந்த காலகட்டம் இது. பாராட்டு, புகழ், விருது உங்களைத் தேடி வரும். பாடலாசிரியர், இசை, நடனக்கலைஞர்களுக்கு ஜூன் மாதத்திற்குப் பிறகு பொன்னான காலகட்டமாக இருக்கும். சக கலைஞர்களிடம் சுமூகமாக நடப்பது நல்லது. வெளியூர் பயணங்களின் போது உடைமைகளை அக்கறையுடன் பார்த்துக் கொள்ளவும்.
மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வக் குறைவு ஏற்படலாம். மனதை ஒரு நிலையாக்கிக் கொள்ளவும். உடல்நலக்குறைவால் சில தடைகள் ஏற்படலாம். உடல்நலத்தைப் பேணுவதில் அக்கறை அவசியம். விளையாட்டில் சாதனை படைப்பீர்கள். அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கு விடாமுயற்சி தேவை. சோம்பல் கூடவே கூடாது. நினைவாற்றலைப் பெருக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். தீய நண்பர்களிடமிருந்து சற்று விலகியிருப்பது நல்லது.
அரசியல்துறையினருக்கு உங்கள் மீது தலைமை அதிக நம்பிக்கை கொள்ளும். உங்கள் நண்பர்களே உங்களுக்கு எதிராக செயல்படலாம். ஆனாலும் புரிந்து கொண்டு செயல்படுவது நன்மை தரும். உங்களுடைய விசுவாசத்திற்கு மேலிடம் உங்களுக்கு சரியான பதவி அளிப்பர். சிலருக்கு சுழல் விளக்குடன் பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். அதே வேளையில் மனஉறுதியை வளர்த்துக் கொள்வது நல்லது.
பெண்களுக்கு குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். நெருக்கடி நேரத்தில் பொறுமையை கடைபிடிப்பது சிறந்தது. குடும்பத்தில் அனைவரிடமும் விட்டுக் கொடுத்து போவது நன்மை தரும். . தேவையற்ற கோபத்தை விட்டுத் தள்ளுங்கள். அக்கம்பக்கத்தினருடன் அளவோடு நட்பு வைப்பது அவசியம். கர்ப்பணிகளுக்கு நிதானமும், பொறுமையும் தேவை.
பரிகாரம்: குலதெய்வத்தை தினமும் வணங்க நன்மை அதிகரிக்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். 

அதிர்ஷ்ட எண்: 2, 6, 7, 9

நிறம்: வெள்ளை, சிவப்பு

சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்மியை நம” என்ற மந்திரத்தை தினமும் 15 முறை சொல்லவும்.


திருவாதிரை:
முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறும் உங்களுக்கு உதவிட பலரும் முன்வருவர்.  மனதை அரித்துக் கொண்டிருந்த பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு தெரியும். தொழிலில் தேக்கநிலை இருந்தாலும் வருமானத்திற்குக் குறைவு வராது. புதிய முயற்சிகளும் ஓரளவுக்குக் கை கொடுக்கும். உங்கள் செயல்களுக்குப் புதிய அங்கீகாரம் கிடைக்கும். திருமணப் பிரச்னை, குடும்பப் பிரச்னை ஏற்பட்டாலும் முடிவு சாதகமாக இருக்கும். மற்றபடி வெளியூரில்  இருந்து நம்பிக்கை ஊட்டும் செய்திகள் வந்து சேரும். பழைய கடன் பாக்கிகளும் வசூலாகும். புதுப்புதுப் பிரச்னைகளுக்கு சிந்தித்து முடிவு காண்பீர்கள். அதே நேரம், குடும்பப் பிரச்னைகளில் மூன்றாம் நபர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். ஏனெனில் நீங்கள் நம்பியவர்களாலேயே ஏமாற்றப்படலாம். அதனால் உங்களுக்குக் கீழ் பணிபுரிவோரிடம் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். தீயோரின் சகவாசத்தை கைவிடுங்கள். பாகப்பிரிவினையை துரிதப்படுத்தாமல் தாமதப்படுத்துங்கள்.
பணியாளர்களுக்கு எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்த சிலர் இப்போது குடும்பத்துடன் சேரும் வாய்ப்புண்டு.  சக பணியாளர்களின் நட்புறவு உங்கள் பணிகளைக் குறைக்கும். பொருளாதார உயர்வு ஏற்படும். எனினும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சக ஊழியர்களிடம் ஒற்றுமையாகப் பழகவும். அதிகாரிகளால் தொந்தரவு இருப்பினும் பெரிய பாதிப்பு நேராது. வேலைப்பளு கூடினாலும் சக ஊழியர்கள் உதவுவர். அலுவலக பணிகளில் வெற்றி பெறுவீர்கள். கடமைகளில் கண்ணுங்கருத்துமாக இருப்பீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு.  ஊதிய உயர்வும் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு கடின முயற்சியால் வாடிக்கையாளரின் ஆதரவைப் பெறுவர். புதிய கிளைகள் திறக்க வாய்ப்புண்டாகும். ஜவுளி வியாபாரிகள் கூடுதல் லாபம் காண்பர். வசூல் செய்வதில் அக்கறை தேவை. படிப்படியான வளர்ச்சி நிலை தொழிலில் உண்டு. வேலையாட்களால் சிறுசிறு பிரச்னைகள் காணப்படும். எனினும் சமாளித்து விடுவீர்கள். தேவையான பணம் கிடைக்கும். கடன் பெறுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தினரின் தேவையைப் பூர்த்திசெய்து திருப்தி காண்பீர்கள்.
கலைத்துறையினர் புதிய வாய்ப்பு கிடைக்கப் பெறுவர். பொருளாதார நிலை உயரும். சக கலைஞர்களிடம் சுமூகமாகப் பழகுவது அவசியம். சிலருக்கு விருது கிடைக்கும். சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள். அடிக்கடி பயணம் செல்ல நேரிடும்.
மாணவர்களுக்கு படிப்பதில் ஆர்வம் கூடும். கல்வி நிலையங்களில் சக மாணவர்களிடம் சண்டையிடுவதை தவிர்ப்பது நல்லது. விளையாட்டு,  பிற துறைகளில் திறமையை வெளிப்படுத்தி பாராட்டு பெறுவீர்கள். மாநில, தேசிய அளவில் சிறந்து விளங்க வாய்ப்புண்டு. விடாமுயற்சி இருந்தால் உங்கள் வாழ்வின் முக்கிய ஆண்டாக இது இருக்கும்.
அரசியல்வாதிகள் பொறுப்பான பணிகளுக்காக தலைமையின் பாராட்டைப் பெறுவர். உங்கள் வளர்ச்சியைக் கண்டு பலர் பொறாமைப்படுவர். புதிய முயற்சிகளில் திட்டமிட்டுச் செயல்பட்டால் வெற்றி உண்டு. தொகுதி மக்களை சந்திப்பதன் மூலம் செல்வாக்கு உயரும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றப் பாடுபடுவீர்கள். மேலிடத்திலிருந்து உதவி கிடைக்கும்.
பெண்கள் குடும்ப முன்னேற்றத்தில் பங்கு கொள்வர். தள்ளிப்போன திருமணம் இப்போது முடியும். மனம் போல் மாங்கல்யம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆன்மிகப் பயணம் செல்வீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. அக்கம்பக்கத்தினரிடம் நெருக்கத்தை தவிர்க்கவும். வீண் பேச்சு பிரச்னையை  உண்டாக்கும்.
பரிகாரம்: துர்கையை வழிபட எதிர்ப்பு நீங்கும். தைரியம் கூடும். பணவரவு திருப்தி தரும்.
அதிர்ஷ்ட எண்: 1, 3, 7, 9
நிறம்: வெள்ளை, சிவப்பு
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் பராசக்தி நம என்று தினமும் 12 முறை சொல்லவும்.


புனர்பூசம் - 1, 2, 3:
குருபகவானை ராசிநாதனாகக் கொண்டு சித்தர் அருள் பெற்ற உங்களுக்கு இந்த ஆண்டில் முக்கிய திருப்பங்களைக் காணப் போகிறீர்கள். திட்டமின்றி செய்யும் காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். தாய்வழி ஆதரவு பெருகும். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வாழ்வில் வளர்ச்சி உண்டாகத் தொடங்கும். திடீரென வெளிநாடுகளுக்குப் பயணப்பட விசா கிடைக்கும். இதன் மூலம் புதிய வாய்ப்பை பெறுவீர்கள். பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புகழும் செல்வாக்கும் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டினால் குதுாகலம் உண்டாகும். உற்றார் உறவினர் பாசம் காட்டத் துவங்குவர். உடலில் இருந்த உபாதை, மனக்குழப்பம் தீரும். புதியவர்கள் நட்பும் அவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். உங்களின் நம்பிக்கை வீண் போகாது. சொத்துப் பிரச்னை சுமுகமாக முடியும். புதிய கல்வி கற்பதற்கான வாய்ப்பு தேடி வரும். அதே நேரம் திரும்பத் திரும்பச் செலவு வைக்கும் வாகனங்களை மாற்றி விடவும். மறைமுகப் பகையை பாராட்டும் பழைய நண்பர்களால் காட்டிக் கொடுக்கப்படும் நிலை இருப்பதால் எவரிடமும் மனம் விட்டுப் பேச வேண்டாம். குடும்ப நிர்வாகத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து எல்லாரையும் அரவணைத்துச் செல்லும் குணம் கொண்டவர்கள் நீங்கள். எதிரிகளைச் சமயம் பார்த்திருந்து கவிழ்த்து விட தயங்க மாட்டீர்கள். ஜோதிடம், வாஸ்து, எழுத்துத் துறையில் சிறந்து  விளங்குவீர்கள்.
பணியாளர்களுக்கு பணிகளில் சிரத்தையும் விடாமுயற்சியும் தேவை. யாரும் குறை கூறாத அளவிற்கு நேரம் தவறாமையை கடைபிடிப்பது நல்லது. சக ஊழியர்கள் ஒத்துழைப்பர். மேலிடம் உங்களிடம் கனிவான உறவினை கொள்ளும். அறிமுகமில்லாதவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். வேலை நிமித்தமாக வெளியூர் பிரயாணம் செல்லலாம். பதவி உயர்வு, இடமாற்றம் தொடர்பாக எடுக்கும் முயற்சி வெற்றி தரும்.
வியாபாரிகளுக்கு போட்டி அதிகம் இருந்தாலும் வாடிக்கையாளர் ஆதரவால் கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும். உங்கள் பணியாளர்களைக் கண்காணிப்பது நல்லது. கூட்டு வியாபாரத்தில் கணக்குகளை சரியாக வைக்கவும். அரசு வகையில் பிரச்னைகள் வரலாம்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்பு மூலம் பொருளாதார நிலை உயரும். சக கலைஞர்களிடம் சுமூகமாக பழகுவது நல்லது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது ஆவணங்களை படித்து பார்ப்பது நல்லது. வெளியூர் பயணத்தி்ன் போது முன்னேற்பாடுகளை சரிவர செய்வது அவசியம்.
மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையலாம். நேர்மறை எண்ணத்துடன் செயல்படுவது நல்லது. விளையாட்டில் ஈடுபடும் போது கவனமாக இருங்கள். உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் நிலை ஏற்படும். விடுதியில் தங்கி படிப்பவர்கள் மனதை சிதற விடாமல் இருப்பது அவசியம். வீண் பிரச்னைகளில் மாட்டிக்கொள்ள வாய்ப்புண்டு கவனம்.
அரசியல்துறையினர் உற்சாகத்துடன் கட்சிப் பிரச்சாரங்களில் பங்கேற்பர். வழக்குகளும் முடிவுக்கு வரும். அதிகாரம் மிக்க பதவிகள் தேடி வரும். தொண்டர்களும் உங்கள் மனமறிந்து நடந்து கொள்வர். பிடிவாதகுணம் என்னும் உங்கள் பலவீனத்தைக் கைவிட்டால் எதிரிகளே இல்லை என்னும் அளவுக்கு எல்லோரையும் உங்கள் வசம் ஈர்த்து விடுவீர்கள்.
பெண்களுக்கு எல்லா செயல்களும் சுமுகமாக முடிவடையும். குடும்பத்தாரின் ஆதரவு கூடும். கணவரிடம் நல்ல உறவு அமையும். ஆன்மிகத்திலும் நாட்டம் கூடும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். கடன் தொல்லை மறையும். வாழ்க்கைத்தரம் உயரும். உடன்பிறந்தோரின் உதவி கிடைக்கும். 
பரிகாரம்:  சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்ற மனம் நிம்மதி பெறும்.
அதிர்ஷ்ட எண்: 1, 3, 9
நிறம்: மஞ்சள், வெள்ளை
சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் சத்குருவே நம’ என்ற மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லவும்.

 
மேலும் 2026 வருட ராசி பலன் »
temple news
அசுவினி: வெற்றி மீது வெற்றிதைரிய காரகன் செவ்வாய், ஞான மோட்சக்காரகன் கேதுவின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
அசுவினி; யோக காலம்செவ்வாய், கேதுவின் அம்சம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் 2025 ஆங்கில வருடம் யோகமான வருடமாக ... மேலும்
 
temple news
அசுவினி; நல்லநேரம் ஆரம்பம்செவ்வாய், பகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2024 ஆங்கில வருடத்தில் ... மேலும்
 
temple news
அசுவினி: தன்னலம் பாராமல் பிறருக்கு உதவும் அசுவினி நட்சத்திர அன்பர்களே இந்த ஆண்டு நீங்கள் ... மேலும்
 
temple news
கார்த்திகை: நல்லகாலம் வந்தாச்சுஆத்ம காரகன் சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar