Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம் : சித்திரை மாத பலன் ரிஷபம் : வைகாசி ராசி பலன் ரிஷபம் : வைகாசி ராசி பலன்
முதல் பக்கம் » ஆடி ராசி பலன் (17.7.2025 முதல் 16.8.2025 வரை)
மேஷம்: வைகாசி ராசி பலன்
எழுத்தின் அளவு:
மேஷம்: வைகாசி ராசி பலன்

பதிவு செய்த நாள்

13 மே
2023
10:05

அசுவினி:
வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படும் அசுவினி நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் வீண்குழப்பம் அகலும். எதைப்பற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பணவரத்து இருந்த போதிலும், எதிர்பாராத சுபச்செலவும் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக உதவி செய்வது மற்றும் அவர்களுக்காக பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். வியாபாரம் தொடர்பான சிறு பிரச்னைகள் தோன்றி மறையும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது அவை போய் சேர்ந்தனவா என்று கண்காணிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீண் பேச்சுகளை தவிர்ப்பதும் நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே சிறு பூசல்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளை களிடம் நிதானமாக பேசுவது நல்லது. கலைத்துறையினர் ஆதாரமின்றி யாரையும் விமர்சிக்க வேண்டாம். கௌரவத்தை காப்பாற்றிக் கொள்ள அதிகம் செலவுகள் செய்ய நேரிடும். அரசியல்வாதிகளுக்கு சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பெண்களுக்கு எதைபற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியை அதிகம் கவலைப்படாமல் பாடங்களை நன்கு படிப்பது நல்லது.
பரிகாரம்: கந்தர்சஷ்டி கவசம் படித்து முருகனை வணங்குவது எல்லா நன்மைகளையும் தரும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 2
அதிர்ஷ்ட நாள்: மே 26, 27

பரணி:
எதிலும் அனுபவ அறிவைக் கொண்டு செயலாற்றும் பரணி நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து திருப்தி தரும். திடீர் கோபம் ஏற்பட்டு அதனால் அடுத்தவர்களிடம் சண்டை உண்டாக நேரலாம். எனவே மிகவும் நிதானமாக இருப்பது நல்லது. வீண் பேச்சை குறைப்பது நன்மை தரும். அடுத்தவருக்கு ஜாமின்  கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதோ அல்லது அதைப் பற்றி விவாதிப்பதையோ தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங் களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களது செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டும் படியாக இருக்கலாம். நிதானத்தை கடைபிடிப்பது வீண் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். குடும்பத்தில் வாழ்க்கைத் துணை ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். கலைத்துறையினர் எதிலும் வெற்றி பெறுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். அரசியல்வாதிகளுக்கு அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். வெகுநாள் கனவான புதிய நிலம், வீடு வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தை சீரமைப்பீர்கள். பெண்களுக்கு வீண்பேச்சை குறைத்துக் கொண்டு செயலில் ஈடுபடுவது வெற்றியை தரும். மாணவர்களுக்கு நட்பு வட்டத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.
பரிகாரம்: மகாலட்சுமியை அர்ச்சனை செய்து வணங்க எல்லா செல்வங்களும் சேரும். கடன் பிரச்சனை தீரும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 3
அதிர்ஷ்ட நாள்: மே 27, 28

கிருத்திகை 1ம் பாதம்:
எதையும் ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கும் உங்களுக்கு இந்த மாதம் எந்த ஒரு காரியத்திலும் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். ராகுவின் சாரத்தால் வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் மூலம் நன்மை உண்டாகும். எதை விரும்பினாலும் அது கிடைக்க வழி தெரியும். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். பணியாளர்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் விரிவாக்கம் செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பணவரத்து கிடைக்க பெறுவார்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். உடல் ஆரோக்யம் அடையும். சொல்வன்மை அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு சுபச் செலவுகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு வழக்கில் அவசர முடிவுகள் வேண்டாம். மறைமுக எதிர்ப்புகள் விலகும். வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். தொலை தூர தகவல்கள் நல்ல தகவலாக வரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். மனோ தைரியம் கூடும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 4
அதிர்ஷ்ட நாள்: மே 28

 
மேலும் ஆடி ராசி பலன் (17.7.2025 முதல் 16.8.2025 வரை) »
temple news
அசுவினி பிறர் ஆச்சரியப்படும் வகையில் முன்னேற்றம் அடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்; நினைத்ததை சாதிப்பதில் முதலிடம் வகிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்; புத்தி சாதுரியத்தால் எதையும் சாதித்து வரும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்; மனசாட்சியின்படி செயல்பட்டு வரும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் கவனமாக ... மேலும்
 
temple news
மகம்: மனதில் எண்ணியதை உடனே நடத்த வேண்டும் என்ற வேகம் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆடி நிதானமாக செயல்பட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar