பதிவு செய்த நாள்
09
அக்
2012
04:10
திட்டமிட்டுச் செயலாற்றி வரும் கடகராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சந்திரன், மாத துவக்கத்தில் சுவாதி நட்சத்திரம் ராகு சாரத்தில் தன் பிரவேசத்தை துவங்குகிறார். இதனால் உங்களின் ஒவ்வொரு செயலில் புதுமை மேலோங்கும். நவக்கிரகங்களில் குரு, கேது, சுக்கிரன், புதன் இந்த மாதம் நற்பலன்களை வழங்குவர். சமூகத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். வீடு, வாகனம் புதிதாக வாங்கும் யோகமுண்டு. ஏற்கனவே உள்ள வாகனங்களாலும் நன்மையே. புத்திரர் சேர்க்கை சகவாசத்தினால் பிடிவாத மனநிலையுடன் செயல்படுவர். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அவ்வப்போது உடல்நிலையில் சோர்வு உண்டாகும். வெகுநாள் தாமதமான சுபவிஷயம் திருப்திகரமாக நிறைவேறும். தம்பதியர் ஒருவருக்கொருவர் பாசத்துடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சி உருவாக்குவர். தொழிலதிபர்கள் நடைமுறை சிரமங்களை சரிசெய்து உற்பத்தி அளவு, தரத்தை உயர்த்துவர். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைத்து லாபம் கூடும். வியாபாரிகள் கடந்த காலத்தில் வாடிக்கையாளர்களிடம் உருவான அதிருப்தியை சரிகட்ட முயல்வர். விற்பனை சிறந்து ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் திறமையுடன் செயல்பட்டு பணியிலக்கை குறித்த காலத்தில் நிறைவேற்றுவர். சம்பள உயர்வோடு சலுகையும் கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் பேச்சுக்கு மதிப்பளிப்பர். அதிர்ஷ்டவசமாக ஆடை, ஆபரணச்சேர்க்கை, உண்டாகும். பணிபுரியும் பெண்கள் புதிய உத்திகளால் பணிச்சுமையை எளிதாக்கி விடுவர். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சுயதொழில்புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் புதிய ஆர்டர் கிடைக்கப்பெறுவர். உற்பத்தி, விற்பனை சிறந்து லாபம் உயரும். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெற தாராளமாகச் செலவு செய்வர். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் ஆதாயம் பெருகும். மாணவர்கள் ஆர்வமுடன் படித்து நல்ல தரதேர்ச்சி பெறுவர்.
பரிகாரம்: லட்சுமி தாயாரை வழிபடுவதால் தொழிலில் லாபம் பன்மடங்கு உயரும்.
உஷார் நாள்: 24.10.12 காலை 9.57 - 26.10.12 மாலை 4.26
வெற்றி நாள்: நவம்பர் 10, 11
நிறம்: ரோஸ், சந்தனம், எண்: 1, 6