உங்கள் ராசிநாதன் சூரியன் மூன்றாம் இடத்தில் நீசம் பெற்று இருந்தாலும் அனுகூலமாக உள்ளார். அதே இடத்தில் சனி உச்சமாகி உங்கள் மனதில் புதிய சிந்தனை, தைரியத்தை உருவாக்குகிறார். நற்பலன் தரும் கிரகமாக வாக்கு ஸ்தானத்தில் சுக்கிரன் உள்ளார். வருமானம் அதிகரிப்பதற்கான அதிர்ஷ்ட வாய்ப்புகள் எதிர்பாராமல் உண்டாகும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.வீடு, வாகன வகையில் பெரிய அளவில் மாற்றம் செய்ய வேண்டாம். புத்திரரின் விளையாட்டுத்தனமான குணங்களை அன்பினால் சரிசெய்வீர்கள். நன்னடத்தை குறைவானவர்களின் விவகாரங்களில் பொறுப்பேற்க கூடாது. தம்பதியர் ஒருவர் நலனில் ஒருவர் அக்கறையுடன் செயல்படுவர். உறவினர்கள் மத்தியில் நற்பெயர் உண்டாகும். நண்பர்கள் உதவியும் ஆலோசனையும் சரியான சமயத்தில் கிடைக்கும். தொழிலதிபர்கள் மூலதனத்தை அதிகப்படுத்தி அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வர். உற்பத்தி யின் தரம் சிறந்து புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். வியாபாரிகள், விற்பனை இலக்கை எட்டிப்பிடித்து முன்னேற்றம் காண்பர். பணியாளர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை பொறுப்புடன் பின்பற்றி சலுகைப்பயன் பெறுவர். குடும்ப பெண்கள் தாராள பணவசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். பணிபுரியும் பெண்கள் சிறப்பாக செயல்பட்டு பணி இலக்கை விரைந்து முடிப்பர். பதவி உயர்வோடு, சலுகைகளும் கிடைக்கும். தொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் உற்பத்தியை அதிகரிப்பர். கூடுதல் வாடிக்கையாளர்களைக் கவர சலுகைத்திட்டத்தைச் செயல் படுத்துவர். வருமானம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் அதிகாரிகளிடம் நற்பெயர் பெறும் விதத்தில் செயல்படுவர். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் நல்ல லாபம் காண்பர். மாணவர்கள் விடாமுயற்சியால் தரதேர்ச்சி காண்பர்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். உஷார் நாள்: 26.10.12 மாலை 4.26 - 28.10.12 பின்இரவு 1.21 வெற்றி நாள்: நவம்பர் 12, 13 நிறம்: மஞ்சள், வெள்ளை, எண்: 2, 3
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »