Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம் : மார்கழி ராசி பலன் ரிஷபம் : தை ராசி பலன் ரிஷபம் : தை ராசி பலன்
முதல் பக்கம் » வைகாசி ராசி பலன் (15.5.2025 முதல் 14.6.2025 வரை)
மேஷம்: தை ராசி பலன்
எழுத்தின் அளவு:
மேஷம்: தை ராசி பலன்

பதிவு செய்த நாள்

12 ஜன
2024
05:01

மேஷம்: அசுவினி: ஞானக்காரகனான கேது, தைரியக்காரகன் செவ்வாயின் அம்சத்தில் பிறந்து, நினைத்ததை சாதித்திடும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு, இந்த மாதம் எதிர்பார்ப்பு நிறைவேறக்கூடிய மாதமாக இருக்கும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற வார்த்தை உங்களுக்கு இப்போது பொருத்தமானதாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எளிதாக வெற்றியாகும். பணி, தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த தகவல் வரும். வெளிநாட்டுத் தொடர்புகள் ஆதாயத்தை உண்டாக்கும். இதுவரையில் மேற்கொண்ட முயற்சிகளில் ஏற்பட்ட தடைகள் விலகும். புதிய தொழில் தொடங்குவதற்காக நீங்கள் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். அரசு வழியில் ஆதாய நிலை உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். தம்பதியரிடையே இணக்கமான நிலை உருவாகும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். முயற்சிகள் நிறைவேறும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். விவசாயிகள் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்திற்காக மேற்கொண்ட முயற்சிகள் லாபத்தில் முடியும். திருமண வயதினருக்கு வரன் தேடிவரும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் தோன்றும்.
சந்திராஷ்டமம்: பிப். 3,4.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 16,18,25,27, பிப். 7,9.
பரிகாரம்: சூரிய பகவானை வழிபட சங்கடங்கள் விலகும்.

பரணி : அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன், வீரியக்காரகன் செவ்வாயின் அம்சத்தில் பிறந்து மற்றவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படும் உங்களுக்கு, இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். நினைத்த செயல் நினைத்தபடி நடந்தேறும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். தொழில், பணி போன்றவற்றில் இருந்த நெருக்கடிகள் விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். பணவரவு அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகும். தம்பதியரிடையே இருந்த பிரச்னைகள் விலகும். பெண்கள் வாழ்க்கையில் இதுவரையில் நிலவிய சங்கடங்கள் விலகி அதிர்ஷ்டம் உண்டாகும். வேலைக்காக முயற்சித்தவர்களின் விருப்பம் நிறைவேறும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். பணியில் இருப்பவர்கள், பணியாளர்கள் விருப்பம் பூர்த்தியாகும். விவசாயிகளின் விளைப் பொருளுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கும். கலைத்துறையினருக்கு அதிர்ஷ்டமான நிலை ஏற்படும். மாணவர்களின் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். சந்திராஷ்டமம்: பிப். 4,5.
அதிர்ஷ்ட நாள்: ஜன.15,18,24,27, பிப். 6,9.
பரிகாரம்: துர்கைக்கு குங்குமம் சாத்தி வழிபட வளம் உண்டாகும்.

கார்த்திகை 1 ம் பாதம் : ஆத்மகாரகனான சூரியன், பராக்கிரமக் காரகன் செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு,  இயல்பாகவே எந்த ஒன்றையும் செய்து முடிக்கும் ஆற்றல் இருக்கும். இந்த மாதம் உங்கள் நட்சத்திரநாதன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். தொழில் முன்னேற்றம் அடையும். போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். பணியில் இருப்பவர்களின் விருப்பம் நிறைவேறும். சனிபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களின் எண்ணம் நிறைவேறும். தம்பதியரிடையே இருந்த சங்கடங்கள், ஈகோ விலகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும். கட்சிக்குள் செல்வாக்கு அதிகரிக்கும். பெண்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். கலைத்துறையினரின் கனவுகள் நிறைவேறும். திட்டமிட்ட செயல்கள் லாபமாகும். விவசாயத்தில் ஆதாயம் அதிகரிக்கும். மாணவர்களின் விருப்பம் நிறைவேறும். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தவர்களின் விருப்பம் நிறைவேறும்.
சந்திராஷ்டமம்: பிப். 6.
அதிர்ஷ்ட நாள்: ஜன.18,19,27,28, பிப்.1,9,10.
பரிகாரம்: நவகிரகத்திற்கு தீபமேற்றி வழிபட நன்மை உண்டாகும்.

 
மேலும் வைகாசி ராசி பலன் (15.5.2025 முதல் 14.6.2025 வரை) »
temple news
அசுவினி: நடப்பது எல்லாம் நன்மைக்கே என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்எதிலும் தனித்து நின்று சாதனைப் படைத்துவரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்சாமர்த்தியமாக சாதனைகள் புரிந்துவரும் உங்களுக்கு பிறக்கும் வைகாசி மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்தெளிந்த ஞானமும்,  செல்வாக்கும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
மகம்மனதில் நினைத்ததை நடத்தி முடித்திட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar