பதிவு செய்த நாள்
13
மே
2024
03:05
மூலம்: தனக்காரகனான குரு, ஞான மோட்சக்காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு தெய்வீக சக்தியும் ஞானமும் நிறைந்திருக்கும். பிறக்கும் வைகாசி மாதம் உங்கள் நிலையில் மாற்றங்களை உண்டாக்கும் மாதமாக இருக்கும். உங்கள் ராசிநாதன் 6 இடத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வைகளால் செய்து வரும் தொழிலில் ஆதாயம், வேலை வாய்ப்பு, புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி, உத்தியோகத்தில் முன்னேற்றம். வெளிநாட்டு வர்த்தகத்தில் லாபம் என்ற நற்பலன்களை உண்டாகும். 3 ம் இடத்தில் சனி சஞ்சரிப்பதால் தடைபட்ட முயற்சிகள் இனி வெற்றியாகும். தைரியமாக செயல்படக்கூடிய நிலை ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். பெண்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது நன்மையாகும். மாணவர்கள் மேற்படிப்பிற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றி அடையும்.
சந்திராஷ்டமம்: மே 15, 16, ஜூன் 11
அதிர்ஷ்ட நாள்: மே 21, 25, 30, ஜூன் 3, 7, 12
பரிகாரம்: பிள்ளையார்பட்டி விநாயகர் வழிபாட்டால் வாழ்வு வளமாகும்.
பூராடம்: ஞானக்காரகனான குரு, அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு அறிவாற்றலும் அதிர்ஷ்டமும் இயல்பாகவே இருக்கும். பிறக்கும் வைகாசி மாதம் உங்கள் வாழ்க்கையில் உயர்வினைக் காணும் மாதமாக இருக்கும். மாதத்தின் முற்பகுதியில் உங்கள் நட்சத்திர நாதன் சாதகமாக சஞ்சரிக்கும் நிலையில் மாதம் முழுவதும் உங்கள் பாக்கியாதிபதி சூரியன் ஆறாமிடத்தில் சஞ்சரிப்பதால் விருப்பங்கள் பூர்த்தியாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். வேலையில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைத் தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். பணவரவு அதிகரிக்கும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். அரசியல்வாதிகளின் விருப்பங்கள் நிறைவேறும். பெண்களுக்கு குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும். எண்ணியது நிறைவேறும். விவசாயிகளின் விருப்பம் பூர்த்தியாகும். மாணவர்களின் மேற்கல்வி முயற்சி வெற்றியாகும்.
சந்திராஷ்டமம்: மே 16, 17, ஜூன் 12
அதிர்ஷ்ட நாள்: மே 15, 21, 24, 30, ஜூன் 3, 6
பரிகாரம்: மகாலட்சுமி வழிபாட்டால் வெற்றி உண்டாகும்.
உத்திராடம் 1 ம் பாதம்: ஆற்றல்காரகனான சூரியன், தனக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு திட்டமிட்டு செயல்படும் திறமை இருக்கும். பிறக்கும் வைகாசி மாதம் உங்கள் நிலையில் உயர்வை உண்டாக்கும் மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திராதிபதி சூரியன் 6ம் இடத்திலும், சனிபகவான் 3ம் இடத்திலும் சஞ்சரிப்பதால் திட்டமிட்டு செயல்பட்டு
லாபம் அடைவீர்கள். நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியாகும். இதுவரையில் இருந்த தடைகள் விலக ஆரம்பிக்கும். தொழில், வேலை போன்றவற்றில் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டாகும். சிலருக்கு புதிய வேலை அமையும். வெளிநாடு செல்லும் முயற்சி யோகத்தை உண்டாக்கும். குருவின் பார்வையால் குடும்ப பிரச்னைகள் முடிவிற்கு வரும் பணவரவு அதிகரிக்கும். புதிய சொத்து சேரும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். பெண்களுக்கு குடும்பத்தில் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னைகள் விலகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் முன்னேற்றம் அடைவதுடன் எதிர்பார்த்த பொறுப்பையும் அடைவர். விவசாயிகள் கவனமாக செயல்படுவதால் நெருக்கடி விலகும். மாணவர்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: மே 17, 18, ஜூன் 13
அதிர்ஷ்ட நாள்: மே 19, 21, 28, 30, ஜூன் 1, 3, 10, 12
பரிகாரம்: ராமநாத சுவாமியை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.