பதிவு செய்த நாள்
13
மே
2024
03:05
உத்திராடம் 2,3,4 ம் பாதம்: ஆயுள் காரகனான சனி, ஆத்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த நீங்கள் அனைத்திலும் முதன்மையானவராக இருப்பீர்கள். வைகாசி மாதத்தில் உங்கள் வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைய இருக்கிறீர்கள். 3ல் சஞ்சரிக்கும் ராகு உங்கள் முயற்சிகளை எல்லாம் வெற்றியாக்கி வரும் நிலையில் மாதத்தின் முற்பகுதியில் செவ்வாயும் மூன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதால் நினைத்தவற்றை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாளாக முடியாமல் இருந்த பிரச்னைகள் இப்போது முடிவிற்கு வரும். இதுவரையில் இருந்த சங்கடங்கள் விலகி இனி நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியாகும். தொழில், உத்தியோகம் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்ப்பு நிறைவேறும். லாபம் அதிகரிக்கும். வேலை தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும். பெண்களுக்கு முயற்சிகள் வெற்றியாகும். தடைகள், தடுமாற்றம் என்ற நிலை மாறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் வரும். விவசாயிகளுக்கு இந்த மாதம் யோகமாக இருக்கும். மாணவர்களின் கனவு பூர்த்தியாகும்.
சந்திராஷ்டமம்: மே 17, 18, ஜூன் 13
அதிர்ஷ்ட நாள்: மே 19, 26, 28, ஜூன் 1, 8, 10
பரிகாரம்: சூரியனை தினமும் வழிபட்டால் நன்மை அதிகரிக்கும்.
திருவோணம்: ஆயுள்காரகனான சனி, மனக்காரகனான சந்திரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எந்தவொரு செயலையும் தனித்து நின்று செய்து வெற்றியடையும் திறமை இருக்கும். பிறக்கும் வைகாசி முன்னேற்றத்தை உண்டாக்கும் மாதமாகும். குருபகவான் 5 ம் இடத்தில் சஞ்சரிப்பதுடன் அவரது பார்வையும் ராசிக்கு உண்டாவதால் 12 ஆண்டுக்குப் பிறகு யோக நிலையை நீங்கள் அடைய இருக்கிறீர்கள். இதுவரையில் உங்களுக்கிருந்த சங்கடங்கள், நலிவுகள், பிரச்னைகள் எல்லாம் ஒவ்வொன்றாக உங்களை விட்டு விலகப் போகிறது. உங்கள் செல்வாக்கு, அந்தஸ்து யாவும் இப்போது உயரப் போகிறது. தொழிலில் இருந்த தடைகளும் பிரச்னைகளும் இருந்த இடம் தெரியாமல் போகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். முடியாமல் இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். விலகிப்போன உறவுகளும் இனி உங்களைத் தேடி வருவார்கள். அரசியல்வாதிகளுக்கும் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் புதிய பொறுப்பு, பதவி வந்து சேரும். செல்வாக்கு உயரும். வேலைத் தேடி வந்தவர்களின் முயற்சி பலிதமாகும். திருமண வயதினருக்கு வரன் அமையும். பெண்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வாழ்வில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். பொன், பொருள், பூமி சேர்க்கை உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் நன்மை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். மாணவர்கள் சிலருக்கு வெளிநாட்டில் மேற்கல்வி பயிலும் முயற்சி வெற்றியாகும்.
சந்திராஷ்டமம்: மே 18, ஜூன் 14
அதிர்ஷ்ட நாள்: மே 17, 20, 26, 29, ஜூன் 2, 8, 11
பரிகாரம்: தினமும் சந்திர பகவானை வழிபட முயற்சி வெற்றியாகும்.
அவிட்டம் 1,2 ம் பாதம்:தைரிய காரகனான செவ்வாய், ஆயுள்காரகனான சனியின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எந்த ஒன்றிலும் தைரியத்துடன் செயல்பட்டு வெற்றி பெறும் திறமை இருக்கும். பிறக்கும் வைகாசி மாதம் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும் மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திரநாதன் செவ்வாய் 3 ல் சஞ்சரிப்பதால் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ராகு பகவானும் அங்கே இணைந்திருப்பதால் லாபம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும். தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். இந்த நிலையில் குருபகவானும் 5ல் சஞ்சரித்து உங்களுக்கு அதிர்ஷ்டங்களை வழங்க இருப்பதால் உங்கள் வாழ்க்கையில் இருந்த சங்கடங்கள் விலகும். அலுவலகப் பணியில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். தொழிலாளிகளுக்கு ஊதியம் அதிகரிக்கும். மதிப்பு உயரும். குடும்பத்தில் சந்தோஷமான நிலை ஏற்படும். பலவழிகளிலும் பணம் வர ஆரம்பிக்கும். இதுவரை நிறைவேறாமல் இருந்த முயற்சி யாவும் இனி வெற்றியாகும். பெண்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பிள்ளைகளால் தோன்றிய கவலைகள் விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வெளிநாட்டு முயற்சிகள் ஆதாயம் அளிக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். அரசியல்வாதிகள் எண்ணம் பூர்த்தியாகும். விவசாயிகள் எதிர்பார்த்த வருமானத்தை அடைவர். மாணவர்கள் மேற்கல்விக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.
சந்திராஷ்டமம்: மே 19
அதிர்ஷ்ட நாள்: மே 17, 18, 26, 27, ஜூன் 8, 9
பரிகாரம்: நரசிம்மரை வழிபடுவதால் சங்கடங்கள் விலகும்.