பதிவு செய்த நாள்
13
ஜூன்
2024
12:06
விசாகம் 4 ம் பாதம்: தனக்காரகனான குரு, தைரியகாரகனான செவ்வாய் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ஆனி மாதத்தை அதிர்ஷ்ட மாதமாகும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் வாழ்க்கையில் எதிர்பார்த்த வளர்ச்சியை அடைவீர்கள். இதுவரை இருந்த சங்கடம் விலக ஆரம்பிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். திருமண வயதினருக்கு வரன் வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். ஆதாயம் அதிகரிக்கும். உத்தியோகம், தொழில், வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு விருப்பம் பூர்த்தியாகும். செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்காலத்திற்குரிய பாதை தெரியும். நோயால் பாதிக்கப்பட்டிருந்த உங்களுக்கு ஜூன் 19 முதல் நிவாரணம் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு மேற்கல்வி முயற்சி அனுகூலமாகும். நீங்கள் ஈடுபடும் செயல்களில் எல்லாம் வெற்றி ஏற்படும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 6
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 18, 21, 27, 30, ஜூலை 3, 9, 12
பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட வாழ்வு வளமாகும்.
அனுஷம் : வீரிய காரகனான செவ்வாய், கர்மக் காரகனான சனி அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ஆனி மாதம் யோகமான மாதமாக இருக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6ம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் இதுவரையில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். எதிர்ப்புகள் மறையும். இழுபறியாக இருந்த வழக்குகள் முடிவிற்கு வரும். உடல்நிலையில் இருந்த சங்கடங்கள் காணாமல் போகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். இந்த நேரத்தில் உங்கள் நட்சத்திரநாதன் சனி ஜூன் 19 முதல் வக்கிரம் அடைவதால் உங்கள் சந்தோஷத்திற்கு ஏற்பட்ட தடைகள் விலகும். நினைத்ததை இனி சாதிப்பீர்கள். விருப்பம் பூர்த்தியாகும். குருவின் பார்வை ராசிக்கு உண்டாவதால் உங்கள் செல்வாக்கு உயரும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். நினைத்ததை நினைத்தபடி நடத்தி முடிக்கும் நிலை உருவாகும். பொருளாதார நிலை உயரும். மற்றவர்களுக்கு உதவி செய்யக் கூடிய அளவிற்கு முன்னேற்றம் காண்பீர்கள். சிலருக்கு புதிய சொத்து சேரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்குரிய வழிகளை உருவாக்குவீர்கள். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 7
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 18, 26, 27, ஜூலை 8, 9
பரிகாரம்: நரசிம்மரை வழிபட நன்மை பன்மடங்கு உயரும்.
கேட்டை: ரத்தக்காரகன், யுத்தக்காரகனான செவ்வாய், வித்யாகாரகனான புதன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ஆனி மாதம் திருப்புமுனை மாதமாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாயும், நட்சத்திரநாதன் புதனும் இந்த மாதத்தில் உங்களுக்கு முன்னேற்றத்தை வழங்க இருக்கிறார்கள். குருபகவானின் பார்வையும் கூடுதலாக நன்மைகளை வழங்கப் போகிறது. சப்தம குருவால் இனி உங்கள் வாழ்க்கை சந்தோஷமாகும். மனதில் இருந்த சங்கடங்கள் விலகும். உங்கள் நிலையில் முன்னேற்றம் தோன்றும். புதியபாதை தெரியும். தம்பதியரிடையே இருந்த சங்கடம் விலகும். சிலருக்கு திருமணம் நடந்தேறும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் விலகும். சனி பார்வையால் சங்கடப்பட்டு வந்த நிலை இனி மாறும். ஜூன் 19 முதல் சனி வக்ரமடைவதால் நோய்களில் இருந்து முழுமையாக மீண்டு வருவீர்கள். உங்கள் திறமை வெளிப்படும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். பண நெருக்கடி விலகும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். பொன், பொருள் சேரும். மற்றவர்களால் ஏற்பட்ட நெருக்கடி இல்லாமல் போகும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 8
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 18, 23, 27, ஜூலை 5, 9, 14
பரிகாரம்: சங்கர நாராயணனை வழிபட்டால் சங்கடங்கள் விலகும்.