பதிவு செய்த நாள்
13
ஜூன்
2024
12:06
உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்: ஆத்மகாரகனான சூரியன், ஆயுள் காரகனான சனி அம்சத்தில் பிறந்து உண்மையைப்பேசி வாழும் உங்களுக்கு பிறக்கும் ஆனி அதிர்ஷ்ட மாதமாக இருக்கும். நட்சத்திரநாதன் 6 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். இதுவரை இருந்த சங்கடங்கள் விலகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். தொழில், வியாபாரம் லாபம் அடையும். போட்டியாளர்களால் ஏற்பட்ட நெருக்கடி விலகும். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். பணியாளர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறும். புதிய தொழில் தொடங்க, வெளிநாடு செல்ல அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். புதன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சிலருக்கு புதிய சொத்து சேரும். முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் செயல்கள் யாவும் வெற்றியாகும். எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்கள். வெளிநாட்டு முயற்சிகள் ஆதாயத்தை ஏற்படுத்தும். திருமண வயதினருக்கு வரன் வரும். குலதெய்வ வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும். நினைத்ததை சாதிக்கும் மாதமாக இருக்கும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 12
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 19, 26, 28, ஜூலை 8, 10
பரிகாரம்: மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட நன்மைகள் உண்டாகும்.
திருவோணம்: உடல்காரகனான சந்திரன், ஆயுள்காரகனான சனி அம்சத்தில் பிறந்து விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழும் உங்களுக்கு ஆனி மாதம் யோகமானதாக அமையும். 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு, நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளையெல்லாம் வெற்றியாக்குவார். தைரியமாக செயல்பட வைத்து மற்றவரால் முடிக்க முடியாத வேலைகளை முடிக்க வைப்பார். உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிப்பார். 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியன் அரசு வழியில் ஆதாயத்தை உண்டாக்குவார். சட்ட சிக்கல்களில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். எதிரி பிரச்னைகளில் இருந்து விடுவிப்பார். வம்பு வழக்குகளில் உங்களுக்கு சாதகத்தை ஏற்படுத்துவார். நோய் நொடி விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வெளிநாட்டிற்கு செல்லும் யோகம் ஏற்படும். மாணவர்களுக்கு மேற்கல்வி முயற்சி வெற்றியாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். குருவின் பார்வை ராசிக்கு உண்டாவதால் செல்வாக்கு, அந்தஸ்து உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 12, 13
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 20, 26, 29, ஜூலை 2, 8, 11
பரிகாரம்: நந்தீஸ்வரரை வழிபட வாழ்க்கை வளமாகும்.
அவிட்டம் 1, 2 ம் பாதம்: கர்மக்காரகனான சனி, தைரிய காரகனான செவ்வாய் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் ஆனி அதிர்ஷ்ட மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திரநாதன் சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்றாலும், 3 ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியன், புதனும், 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவின் சஞ்சாரமும் அவருடைய பார்வைகளும் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை இப்போது உண்டாக்கும். இந்த நேரத்தில் ஜூன் மாதம் 19 ம் தேதி தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனி வக்கிரம் அடைவதால் வாழ்க்கையில் இருந்த நெருக்கடி, உடல் பாதிப்புகள் முழுமையாக விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானத்தில் இருந்த தடை விலகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு வந்து சேரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். முயற்சி யாவும் வெற்றியாகும். புதிய சொத்து சேரும். மாணவர்களின் கனவு நனவாகும். தம்பதியருக்குள் இருந்த பிரச்னைகள் விலகும். விஐபிகளின் ஆதரவு கிடைக்கும். எல்லா வகையிலும் உங்கள் செல்வாக்கு உயரும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 15, ஜூலை 13,14
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 18, 26, 27, ஜூலை 8, 9
பரிகாரம்: அனுமனை வழிபடுவதால் நன்மை அதிகரிக்கும்.