பதிவு செய்த நாள்
14
செப்
2024
02:09
ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 ம் பாதம் ; எதிலும் திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காணும் திறமை படைத்த உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நினைத்ததை அடையும் மாதம். உங்கள் நட்சத்திர நாதன் சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது பகவானுடன் 5 ம் இட அதிபதி புதனும் இணைகிறார். அதனால், எந்த ஒன்றிலும் நிதானமாக இக்காலத்தில் செயல்படுவது அவசியம். இருந்தாலும், பெருமளவில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. குரு பகவானின் பார்வை ஐந்தாம் இடத்திற்கு உண்டாவதின் காரணமாக குல தெய்வ அருளும் உங்களுக்கு உண்டாகி எந்த ஒன்றிலும் நினைத்ததை அடையும் நிலை உண்டாகும். 6.10 முதல், புதன் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் எல்லாவற்றிலும் லாபம் கூடும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தங்களில் கையொப்பம் இடுவீர்கள். கைமேல் பலனாக புதிய சொத்து வாங்குவதற்காக மேற்கொண்ட முயற்சி எளிதில் வெற்றியாகும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு வரும். புகழ் அதிகரிக்கும். மாணவர்கள் நிலையில் முன்னேற்றம் தோன்றும். படிப்பில் அக்கறை கூடும். தம்பதிக்குள் இருந்த பிரச்னை விலக ஆரம்பிக்கும். ஒரு சிலருக்கு திருமண யோகம் உண்டாகும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்கள் ஏக்கம் தீரும். தெய்வீகத் தலங்களுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றுகின்ற நிலை உருவாகும். இந்த மாதத்தில் சின்னச் சின்ன தடை உண்டானாலும் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் மாதமாக இருக்கும்.
சந்திராஷ்டமம்: அக். 9.
அதிர்ஷ்ட நாள்: செப். 19, 24, 28. அக். 1, 6, 10, 15.
பரிகாரம் கோமதி அம்மனை வழிபட குறை தீரும். நன்மை உண்டாகும்.
ரோகிணி: மன வலிமையுடன் செயல்பட்டு, எதிலும் வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதம். லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் ராகு பகவான் உங்களுக்கு இருக்கும் நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி இலாபத்தை உண்டாக்கும். பணியாளர்களால் முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தவர்களுக்கு விருப்பம் பூர்த்தியாகும். தடைபட்ட வேலை நடக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வருவாய் அதிகரிக்கும். சுய தொழில் செய்து வருபவர்கள் நிலை உயரும். வார்த்தைகளின் வழியே சில சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும். ஜென்ம குரு அலைச்சலை அதிகரித்தாலும் பல வழியிலும் ஆதாயத்தை தருவார். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமணத்திற்காக காத்திருப்பவருக்கு தகுதியான வரன் அமையும். தந்தை வழி உறவுகளின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலக ஆரம்பிக்கும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செயல்படுவீர். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். வீடு கட்டும் முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். விவசாயிகள் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பெண்கள் நட்புகள் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
சந்திராஷ்டமம்: அக். 9, 10.
அதிர்ஷ்ட நாள்: செப். 20, 24, 29. அக். 2, 6, 11, 15.
பரிகாரம்: திங்களூர் சந்திர பகவானை வழிபட மனம் தெளிவாகும். முயற்சி வெற்றியாகும்.
மிருகசீரடம் 1, 2 ம் பாதம்: ; அதிர்ஷ்டத்துடன் வாழ்பவராக பிறப்பெடுத்த உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் முயற்சிகளால் முன்னேற்றம் காணும் மாதம். ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து வரும் குரு பகவான் 5, 7, 9 ம் இடங்களைப் பார்ப்பதால் செல்வாக்கு உயரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும் பெரியோரின் ஆதரவு ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். புதிய இடம் வாங்குதல், வீடு கட்டுதல் போன்றவை நிறைவேறும். உங்கள் நட்சத்திரநாதன் வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வார்த்தைகளில் கவனம் தேவை. இக்காலத்தில் தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். புதன் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் சாதுரியத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உங்கள் செயல்களில் தெளிவு இருக்கும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் உத்தியோகத்தில் இருந்த பிரச்னை இல்லாமல் போகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் முடிவிற்கு வரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவும் நண்பர்களின் ஒத்துழைப்பும் உங்கள் நிலைக்கு கைகொடுக்கும். நினைத்த காரியங்களை நடத்திக் கொள்ளக்கூடிய சக்தி உண்டாகும். மாதத்தின் கடைசியில் தேவையற்ற ஆசைகளால் பொருள் இழப்பும் ஒரு சிலருக்கு ஏற்படும் என்பதால் கவனமாக இருப்பது அவசியம். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதி யோகமாக இருக்கும். கலைஞர்கள், பணியாளர்கள், உத்தியோகஸ்தர்கள் நிலை உயரும். வரவு திருப்தி தரும்.
சந்திராஷ்டமம்: அக். 10.
அதிர்ஷ்ட நாள்: செப். 18, 24, 27. அக். 6, 9, 15.
பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடம் விலகும். நன்மை அதிகரிக்கும்.